பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 புலவர் கா. கோவிந்தனார்

விட்டன. தன் கதிர் வெப்பக்கொடுமையால், உலகை யெல்லாம் எடுத்து அழிக்கவல்ல ஞாயிறு தனி ஒரு ஞாயிறாக இல்லாமல், பல ஞாயிறுகளாகக் கூடிவந்து எரித்து அழிக் கின்றனவோ எனக், காண்பவர் நடுங்குமாறு மிகப்பெருந்தி, தன் எண்ணிலா நாக்குகளால் தீம்பிழம்புகளைக் கக்கி, ஒரு நாட்டையே எரித்துக் கொண்டிருப்பது கண்டார். கண்ணில் நீர் மல்க, நெஞ்சில் நெடுந்துயர் மூள, நிலை குலைந்து போய்விட்டார். 'இப்பெருந்தீயை முட்டிவிட்ட கொடியவன்யாவன்?' என்ற கடும்வினா அவர் வாயினின்றும் வெடித்து வெளிப்பட்டது. ஊர்ப்பெரியவர்கள், புலவர் பெருமானே! இது செய்தவன் வேறு யாரும் அல்லன்: எவனொருவன் புகழ் பாடத், தாங்கள் செல்கிறீர்களோ, அச்செல்வக் கடுங்கோ வாழியாதனின் நாற்படைகள்தான் இதையும் செய்கின்றன. கபிலரே! உயிர் கொல்லும் கூற்று வனை நீர் கண்டிருக்கமாட்டிர்; ஆயினும் கேட்டிருப்பீர்; கேட்கும் உயிர்களை மயக்கம் போட்டுவிழச் செய்து விடுமாறு, இடியேறு போலும் பேரொலியை எழுப்பி யவாறே உலகெங்கும் சென்று உயிர் கொள்வான் கூற்றுவன் என்பர். அக்கூற்றுவனுக்கு நிகரானவன் செல்வக் கடுங்கோ. அவன் கைவண்ணந்தான், தாங்கள் காணும் இச்செவ்வண்ணம் என்றனர். . . -

அவ்வளவ்ே; செல்வக் கடுங்கோவின் கொடைவளப் பெருமை கேட்டு, அவன்பால் அன்புகொண்டு, அவனைக் காணச் செல்லும் தன் அறியாமைக்கு வருந்தினார். அவன் கொடை புகழ்நலம் கூறிய தம்மூர்ச் சான்றோர்.பால், அவனின் பிறகுண இயல்புகளை அறிந்து கொள்ளாது போனேனே எனத், தம்மை நொந்து கொண்டார். சேர நாடு சென்று செல்வக்கடுங்கோவைக் காண வேண்டும்: அவன் புகழ் பாட வேண்டும் என்ற எண்ணத்தைக் கை விட்டு, அவனைப் பழிக்கவும் துணிந்துவிட்டார். -