பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*.

புலா அம் பாசறை . - 35

மலைக்கு இடம் இல்லை. இல்லையாகவும், ஈண்டு, எவ்வாறு ஒரு மலை காட்சியளிக்கிறது என எண்னத் தொடங்கி, அம்மலையைச் சற்றே உற்று நோக்கினார். உண்மை புலப்பட்டு விட்டது. அது மலை அன்று. மலை போல் உயர்ந்த கோட்டை மதில். மதிலே, மலை போல் இருக்கும்ாயின், கோட்டை எத்துணைப்பெரிதாக இருக்கும் என்ற வியப்பு மேலும் மிகவும் கோட்டையை நோக்கி விரைந்தார். ; : * ,

கோட்டையைச் சூழ வெட்டப்பட்டிருக்கும், ஆழ்ந்து அகன்ற அகழியும், புற மதிலையும், கரையையும் அலைக் கழித்து எழும் பேரலைகள் வீசும் அகழி நீரும், அவர் கால் களைத் தடுத்து நிறுத்தின. கபிலர் எண்ணிப் பார்த் தார். நாட்டின் நன்செய் புன்செய்களின் வளத்திற்காம் காரணம் புலப்பட்டு விட்டது. இம்மண்ணுக்கு உரியவன், இத்துணைப் பெரிய கோட்டை அமைத்துக் காத்து வரு வதினாலேயே, இத்துணை வளமும் ஈங்கே உள்ள்ன என எண்ணினார். அவர் வாய், அவர்ை அறியாமலே, அந் நாட்டையும், அதன் வளத்தையும் அவற்றிற்குக் காவலாக அமைந்திருக்கும் அரணையும், அரணைச் சூழ எழுப்பப் பட்டிருக்கும். மலை போலும் மதிலையும், வெட்டப் பட்டிருக்கும் அலை ஒயா அகழியையும் பாராட்டிப் பாடத் தொடங்கிவிட்டது. மெய்ம் மறந்து பாடிக்கொண்டே இருந்தார். அப்போது ஆங்கு வந்து சேர்ந்தனர். அங்ஆர் ஆன்றோர் சிலர். கபிலரை அணுகி, மல்ல விளித்தனர். அது கேட்டுத், தன்னுணர்வு வரப் பெற்ற கபிலரைப். பார்த்து * *

  • இந்நாட்டு வளம் பாடும் புலவர், பெருமானே! சற்றே இப்பக்கம் வந்து, இம்மேட்டில் ஏறி நின்று, அதோ அந்தத் திக்கில் நோக்குவீராக” என வேண்டினார் ஆன்றோர் காட்டிய திக்கில், தம் விழிகளைப் போக்க விட்டார் கபிலர்: அவ்வளவுதான்; அவர் கண்கள் குளமாகி