பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 புலவர் கா. கோவிந்தனார்

ஞாயிற்று வெப்பத்தால் களைத்துச் சோர்ந்து விடாவாறு காக்கவல்ல நிறை நிழல்தரும் காஞ்சி மரங்கள், அக்கள்த்து மேட்டில் நிறைந்திருக்க வேண்டும் என உணர்ந்து, களத்து மேட்டை அமைத்திருக்கும், அவ்உழவர் தம் அறிவுத் திறன் கபிலர் கருத்தினை.ஈர்த்தது. ,

கறவைகளை முல்லைக்காட்டில் மேயவிட்டு, அவற்றின் பாற்பயன் கொள்வதும், மருதநில்த்து மண்ணைப் பொன் னாக்கும் நெற்பயன் கொள்வதுமாகிய உழைப்பில் மட்டும் சிறந்தவரல்லர்: உழைப்பின் ஊடே தம்மை ஒப்பனை செய்து கொண்டு, உள்ளம் களிக்கும் இன்ப வாழ்விலும் கருத்துடையவர் அவ்வுழவர். நெல் அரிந்த நிலங்களில், நிலச் செழிப்பால் தாமே வளர்ந்து விட்ட் ஆம்பல் கொடி களில் மலர்ந்து கிடக்கும் மலர்களைத் தங்கள் தலைமுடி களில், அழகுறச் சூடிக் கொண்டு, கோது போக வடித் தெடுத்த கள்ளுண்டு களிப்பதும் செய்வர். கள்ளுண்ணு வதிலும், உடல் தளர்ச்சியும், உள்ளத் தளர்ச்சியும் போக அளவாக உண்பரே அல்லது, தம் தலையில் சூடியிருக்கும் ஆம்பல் மலர்களில் நிறைந்து வழியும் தேனைக் குடிக்கவும், வடித்தெடுக்கும் வழிவழியும் மதுரத் தேறலைப் பருகவும் வந்து மொய்ப்பதன் மூலம் சிறகடித்துத் திரண்டு வந்து, தம்மை வளைய வளைய வந்து தொல்லை தரும் வண்டுக் கூட்டங்களை ஒட்டித் துரத்த இயலாவாறு நினைவிழந்து போகுமளவு பெருகக் குடிப்பாரல்லர்.

முல்லைக்காட்டுப் புல்வளம், ஆங்கு வயிறார மேய்ந்து

கிடக்கும். கறவைகளின் வனப்பு, மருத நாட்டு வயல் வளம், அல்வயலில் உழுதுப் பயன் கொள்ளும் உழவர் செல்வச் செழிப்பு, அ வ ர் க ளி ன், ஆடல்,

பாடல், அறிவுச் தெளிவு ஆகியவற்றை எண்ணி மகிழ்ந்த

வாறே செல்லும் கபிலர் கண்முன், மலை ஒன்று தென் பட்டது. வியப்பில் ஆழ்ந்து போனார். நாம் நிற்பதோ வயல்களை மட்டுமே கொண்ட மருதநிலம். மருத நிலத்தில்