பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உரைசால் வேள்வி

கல்வி, செல்வம், ஆண்மை ஆகிய இவ ற் றி ல் சிறப்பு:றினும், புகழ் கண்டாம் ஆயினும், ஈகையில் சிறப் புறுதலால் உண்டாகும் புகழே ஒப்புயர்வற்ற புகழாம். "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ். "ஈதல் இசைபட வாழ்தல்' என திருவள்ளுவர் கூறுவது காண்க.

அறிவு பெறுதல், பிறர் துயரைத் தன் துயராகக் கொண்டு, உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்து, அது தீர்ப்பதற்கே. அதற்குப் பயன்படாத அறிவு, உண்மை அறிவாகாது. 'அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய், தன் நோய் போல் போற்றாக்கடை?” என்ற வள்ளுவர் வினாவினைக் காண்க. -

செல்வம் சேர்ப்பது எல்லாம், ஈதலுக்காகத்தான். 'தாளாற்றித் தந்த பொருள் எல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற்பொருட்டு: "சுற்றத்தால் சுற்றப் பட ஒழுகல், செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன் “செல்வத்துப் பயனே ஈதல்:' செல்வர்க்கு அழகு செழுங் கிளைதல் தாங்குதல்', 'தக்கவன் ஒருவர் வாழத் தன் கிளை வாழ்ந்தது” என்ற ஆன்றோர் உன்மைகளைக் காண்க

ஆண்மையும் பிறர் தீர்ப்பதற்கே, பெரு நிலம் முழுதாளும் வேந்தர்களும், குறுநிலத் தலைவர்களும்