பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 55

போர் மேற்கொள்வது, பகைவர். பொருள் கொண்டு பரி சிலர்க்கு லழங்கவே. 3.

'இன்னாவாகப் பிறர் மண்கொண்டு இனிய செய்திகின் ஆர்வலர் முகத்தே"

எனப், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதியை நெட்டிமையார் பாடுவது காண்க (புறம்-129

“೩೧73ನು பலதந்து அவ்வெயில் கொண்ட sெய்வுறு கன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கி' (புறம்-5)

பலர் புறம் கண்டு அவர் அருங்கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரி'

(மலைபடு கடாம் 71-72) ,

என்ற பாராட்டுரைகளைக் காண்க.

இரவலர் வந்து தம் இன்மை கூறி இரத்தால், உண்ணாது வாடும் அவர் வயிற்றைக் காட்டி, 'இவர் துயர் தீர்க்க உதவும் வேற்படையினை வடித்துத் தா' எனத் தன்னுார்க் கொல்லனை இரந்து நிற்கும் ஈர்ந்துார் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாராட்டுவது காண்க. (Lipt : 180) . . . . . .

ஆகக் கல்வி, செல்வம், ஆண்மை போன்றவைகளும், ஈத்துப் பெறும் புகழுக்குத் துணை புரிந்த வழியே பயன் உடையனாக மதிக்கப் பெறும்.

கொடுத்துப் புகழ் பெறுவது ஒன்றைத் தவிர்த்துத் தப்பாது வெற்றியே கொள்ளும் வாட்படை உடைமையால் கொற்றமும், அவ்வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டி