பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. புலவர் கா. கோவிந்தனார்

முழக்கும் முரசும், அவ்வெற்றியின் விளைவாகப் பெற்ற

பொற்குவியலும் கொண்டு வாழ்ந்த கொற்றவர் ஒருவர் அல்லர், இருவரல்லர்; ஆயிரம் ஆயிரவர். ஆனால் அவர்தம் வெற்றி முரசின் முழக்கம் மக்கள் காதுகளில் இன்று ஒலிக் கிறதா என்றால் இல்லை: அது எப்போதோ ஒலி அவிந்து போய் விட்டது. - + .

வெற்றிக்கு வழி வகுத்த அவர் கொற்றவாளை, இன்று காண இயலுமா என்றால் இல்லை. அது எப்போதோ இல்லாகி விட்டது. அவர் ஈட்டி வைத்த பொற்குவியலும் இப்போது இல்லை. அது மண்ணோடு மண்ணாக மறைந்தே விட்டது. அவர் ஆயிரவர் ஆயிரவர் தாம். ஆனால், அவருள் ஒருவராவது அழியாது வாழ்கின்றனரா என்றால் இல்லை. அவர் அனைவருமே அழிந்து போயினர். 'அரசர்க்கு அமைந்த ஆயிரம் கோட்டம்" என்கிறது மணிமேகலை. கடம்பு எறிந்தவன்; இமயத்துச் சிலை பொறித்தவன் எனப் புகழ்ந்து பாராட்டப் பெற்றவ ரெல்லாம், இறவா வரம் பெற்று விடவில்லை. அவருள் ஒருவர் கூட இப்போது இல்லை. "கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும், விடர்ச் சிலை பொறித்த விறலோன் ஆயினும்...மீக்கூற்றாளர் யாவரும் இன்ம்ையின் (சிலம்பு : நடுகல் 135-149) என்கிறார் இளங்கோவடிகளார்.

கல்வி, செல்வம். கொற்றம் தரும் வாழ்வினும் கொடை தரும் வாழ்வே விழுமியது என்ற இவ்வுண்மைக்ளை உணர்ந்து, அவ்வழி வாழும் வல்லாளன் செல்வக் கடுங்கோ என அறிந்து அவனைப் பாராட்டிப் பெருமை செய்ய அவன் நாடு நோக்கிப் புறப்பட்டார் கபிலர். -

ஒரிடத்திலிருந்து பிறிதோரிடத்துக்குக் கால்நடை யாகவே செல்ல வேண்டியிருந்த பழங்காலத்தில், மக்கள் பொதுவாகப் ப்கற்போதைய வழிநடையினை விரும்புவ