பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 57

தில்லை. விடியற் போதிலேயே அது மேற் கொள்வர். ஞாயிற்றின் கதிர்கள் கக்கும் வெப்பக் கொடுமை இல்லாத, வானத்து விண்மீன் கட்டங்கள் கண் சிமிட்டும் இன்பம் மிகும் காரிருள் சூழ்ந்த விடியற்போதில்தான், கண்ணகியும் கோவலனும், கெளத்தி துணைவரப், புகார் நகர் விட்டுப் புறப்பட்டனர். 'வான் கண் விழியா வைகறை யாமத்து, மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக் காரிருள் நின்ற கடைநாட் கங்குல். நீள் நெடும் வாயில், நெடுங் கடை கழிந்து' (சில்ம்பு 10: 1-2) என்ற வரிகளைக் காண்க.

கபிலரும் விடியற்போதில் புறப்பட்டு விட்டார். வானத்தில், சிறியவும் பெரியவுமான விண்மீன்க்ளின் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு களிப்புற்றவாறே சென்று கொண்டிருந்தார். விடியற்போது மெல்ல மெல்லக் கழியத் தொடங்க, வானத்தில் காணப்பட்ட மீன்கள் ஒவ்வொன் ராக மறைந்து கொண்டே வந்தன. இறுதியில், கீழ் வானத் தே, ஞாயிறு, தன் செந்நிறக் கதிர்களை விரித்துக் கொண்டே எழுந்து விட்டான். அவ்வளவுதான். காரிருள் வானில் கண்சிமிட்டிக் கொ ண்டிருந்த விண்மீன்களில் ஒன்று கூடப் புலப்பட்டிலது. அது, சேரர் குலத்தில் செல், கடுங்கோ தோன்றவே அதற்கு முன்னர்ச் சிறக்க வாழ்ந் திருந்த பேரரசர்களும், சிற்றரசர்களும் ஒருசேர மறைந்து போக, அவர்களை வெற்றி கொண்ட செல்வக் கடுங்கோ செயலை நினைவூட்ட, செல்வக் கடுங்கோவின் அக்கொற் றத்தை, ஞாயிறு தோன்ற, விண்மீன் கூட்டம் இல்லாமற் போன நிகழ்ச்சியோடு இணைத்துப் ப்ார்த்து நெஞ்சு மகிழ, அவ்வெற்றிக்குத் துணையாய் நின்ற அவன் வவிய கால்கள், மேலும் பல்லாண்டு வலிவோடு திகழ்வனவாக, என வாய் வாழ்த்த, அவர் மேலும் செல்வத் தொடங்கினார்.

கடற்கரையை ஒட்டிய நாடு. எண்ணிலா உப்பங்கழி

களால் நிறைந்திருந்தது. நீர் கருதிறம் காட்டுமளவு, அக்கழிகள் ஆழ்ந்து இருந்தன. அந்நிலத்துக்கே உரிய