பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழியாதனைக், கபிலரும், எட்டாம் பத்தில், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை, அரிசில்கிழாரும், ஒன்பதாம் பத்தில், குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை யைப் பெருங்குன்றுார் கிழாரும் பாடியுள்ளனர். கிடைத் துள்ள எட்டுப் பத்துக்களையும், பதிற்றுப் பத்து விளக்கம் என்ற் வரிசையில், ஒவ்வொரு, பத்திற்குமான விளக்கங் களைத் தனித்தனி நூலாக எழுதி வரிசைப்படுத்தி யுள்ளோம். - . - “. .

அவற்றுள், இரண்டாம் பத்தின் விளக்கம் 'புண் உமிழ் குருதி” என்ற தலைப்பிலும், மூன்றாம் பத்தின் விளக்கம் "அடு நெய் ஆவுதி' என்ற தலைப்பிலும், நான்காம் பத்தின் விளக்கம் கமழ் குரல் துழாய்” என்ற தலைப்பிலும், ஐந்தாம் பத்தின் விளக்கம் “சுடர் வீ. வேங்கை' என்ற தலைப்பிலும், ஆறாம் பத்தின் விளக்கம் 'வடு அடும் நுண் அயிர்” என்ற தலைப்பிலும், புலவர் கா. கோவிந்தனார் அவர்களுடைய விளக்கவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளன.

இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத் தக்க வ்கையில் நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புல்வ்ராக விளங்கியவர். புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்.

தமிழுக்கும். தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ்நாட்டுக்கும், தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்' என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்ற பேறு. பெற்றவர். பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திள்ைத்து, வரலாற்றுக் கண் கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை இக்காலத்தவரும்