பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 59

கொடுத்துப் பெருமை செய்த செல்வக் கடுங்கோவைக் கண் குளிரக்கண்டீர்களா? அவன் நலமே உள்ளனனா? இப்பரிசில் பொருட்களைப் பெற, அவன் தலைநகரில் நீண்ட நாட்கள் தங்கவேண்டி நேர்ந்ததா?” என்றெல்லாம் கேட்டார் கபிலர்

கேட்டவர், பெரும் புலவராம் கபிலர் என்பதை அறிந்து கொண்ட வயிரியர் தலைவன், புலவர் பெருந்தகையே!' என அன்பொடு அழைத்து, நாங்கள் ஆங்குச் சென்றபோது, அரசியல் பணி காரணமாக, அவன் மாளிகை அகத்தே இருந்தான் போலும். அதனால் அவனைக் காண இயல வில்லை; காண முடியவில்லையே ஒழிய, கருதியது கிடைக் காமல் போய்விடவில்லை. தன்னை நாடி வரும் கூத்தர் முதலாம் இரவலர், நெடும்பொழுது காத்திருந்து வருந்துதல் கூடாது என்ற உயர்ந்த உள்ளம் உடையவனாய், மாளிகை வாயிற் புறத்திலேயே தக்கார் சிலரை நிறுத்தி, இரவலர் களைக் கண்ணுற்றபோதே, அவர்களை அன்போடு விர வேற்று அவர்கட்குக் குதிரை முதலாம் பொருட்களைக் கொடுத்து அனுப்புக எனப் பணித்துள்ளான். அதனால், அவன் மாளிகைப் புறத்திலேயே இவ்வளவும் கிடைத்து விடவே, அவனைக் காணவேண்டிக் காத்திருக்காது திரும்பி விட்டோம்' என்றான். - -

மாளிகைப் புறம் போந்து, இரவலர்களை வரவேற்று அவர்க்குப் பரிசில் அளித்து அனுப்புவதற்கும் நேரம் இன்றி. அரசியல் பணிகளில் ஆழ்ந்திருக்கும் நிலையிலும்; வரும் இரவலர்க்குப் பரிசில் அளிப்பதற்கு மறவாது வழி வகுத்திருக் கும் செல்வக் கடுங்கோவின் சீரிய செயலைச் சிந்தையில் அசையிட்டவாறே மேலும் நடக்கலானார் கபிலர்.

சிறிது Grសាលា சென்றதும், எதிரே அந்தணர் கூட்டம் ஒன்று வருவது தெரிந்தது. அணுகி வர வர, அவர்கள் வாய், தாம் கற்ற அறநூல் உண்மைகளை ஓயாது எடுத்துரைத்துக்