பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புலளர் கா. கோவிந்தனார்

கொண்டே யிருப்பது கேட்டது. உலகத்து உயர்ந்தோர் அனைவரும் ஒருசேரப் புகழும் சிறப்பு வாய்ந்த வேள்வி யினைச் செய்து முடித்ததற்கு வேண்டியதும், அத்தகு வேள்விகள் பல செய்து முடித்தமையால், மேலும் விளக்கம் பெற்றதுமாகிய கேள்விச் செல்வம் வாய்க்கப் பெற்றவர்: அவ்வந்தனர் என்பதைக் கண்டு கொண்டார். அவர் கைகளில், செல்வக் கடுங்கோ வழங்கிய பொன் அணிகள் - நிறைந்து ஒளி வீசுவதையும் கண்டார்.

உள்ள இடைவழியை விரைந்து கடந்து, தலைநகர் அடைந்து, அரண்மனையை அணுகிக் கொண்டிருந்தார். அப்போது, அர்ண்மனை முற்றத்தில் நின்று காவல் மேற் கொண்டிருக்க வேண்டிய களிறு, பாகன் ஆணைக்கு அடங் காது, ஆங்கு நிற்க வெறுத்து முரண்டு பிடித்து அலைவதைக் கண்டார். ஆறெனக் கிடந்து அகன்ற அரசப் பெருந் தெருவின் இருமருங்கிலும் ஒதுங்கியிருந்து, அக்களிற்றின் செயல் நோக்கி நிற்பாரை அணுகிக், களிற்றின் அப் போக் கிற்காம் காரணம் யாது எனக் கேட்டார்.

அவர்கள், வரும் வழியில், அந்தணர் பெருங் கூட்டம் ஒன்று செல்வதையும், அவர்கள் கொண்டு செல்லும் பொன் அணிகளின் சுமையினையும் கண்டிருப்பீர்; அவற்றை அவர்க்கு வழங்கிய் செல்வக் கடுங்கோ, அந்தணர் குலத்து மரபிற்கு ஏற்ப, அணிகளை, அவர் கையில் தண்ணீர் வார்த்தே வழங்கினான். அவ்வாறு நீர் வார்த்துக்கொடுக்கப் பரிசு பெற்ற பார்ப்பனர் ஒருவர் இருவர் அல்லர். மிகப் பலராவர். அவர் கைகளில் அவ்வாறு வார்த்த நீர் ஒழுகி, மாளிகை முற்றம் சேறு பட்டு விட்டது. நாள்தோறும் பழம் மணல் அகற்றிப் புது மணல் பரப்பப் பெறும் இடந் தான் அம்முற்றம் என்றாலும், நீர் வார்க்கப் பரிசில் பெறுவோர் எண்ணிக்கை அளவிறந்ததாகி விடுவதால், முற்றம் எப்போதும் சேறுபட்டே கிடக்கிறது. சேற்றில்