பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசை ° 75

செய்துவிட்டது, இடைவழியில் இருந்த பாணர் குடியிருப்பு. பண்ணிசைத்தல் வல்ல, அதிலும் பாலைப் பண்ணின் பண்பெலாம் உணர்ந்து தெளிந்த பாணன் ஒருவன், 'பாலை யாழை மீட்டி, பாலைப் பண்ணோசையை உலாவிட்டிருந் தான். பாலைப்பண், அழுகைச் சுவை உணர்த்துவது: ஆனால், அந்த அழுகைச் சுவையும் அதைப் பாலை யாழில் எழுப்புவான் கைத்திறத்தால், கேட்போர். உள்ள்த்தில் கிளுகிளுப்பை முட்டிவிட வல்லதாம். அழுகைச் சுவையி திறத்தையெல்லாம் மாற்றி மாற்றி எழுப்பிய திறத்தால் பேரின்பம் ஊட்டிய பாலைப்பண் இசையில், தம்மை மறந்து நின்றுவிட்ட் கபிலர், செல்வக் கடுங்கோவின் நாளோலக்க நினைவு முந்துறவே, அவன் அவை நோக்கி விரைந்தார். -

ஆங்கு, அரசவை வந்திருப்பார் அனைவர்ச்கும், செல்வக் கடுங்கோ கள் வழங்கும் காட்சி, கபிலர்க்குக் களிப்பூட்டு வதாய் அமைந்தது. எண்ணிலாச் சாடிகள், பூவும், பொட்டும், புது மணமும் கொண்டு அலங்கரிக்கப்பட். டிருந்தன. அவை ஒவ்வொன்றிலும் வகை வகையான சுவை வாய்ந்த கள், ஒன்றிற்கொன்று சுவை கூடும் கிள் நிறைந் திருந்தது. அவைக்கண் லந்துள்ளர்ர் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு சாடியிலிருந்தும் முகந்து முகந்து, நிலம் சேறு முட்டுப் போகுமாறு பெய்யும் பெருமழை போல, பெருக வார்ப்பதையும், அவைக்கண் உள்ளார் அனைவரும், ஒன்றிற் கொன்று, சுவையில் குறைவுபடா அக்கள்ளுண்டு, களித்துக் கூத்தாடுவதையும் கண்டாம் கபிலர். அவரோடு கூடி, அக்கள்வகை உண்ட கபிலர்க்கு இடைவழியில் பாணர்க் குடியிருப்பில், அழுகைச் சுவையதே எனினும், இசைப்போன் திறமையால் பாலைப் புண்ணின் பல்வேறு கூறும் இன்பமே ஊட்டியது நினைவிற்கு வரவே, அத் தகு பேரின்பம் ஊட்டும் பெரியோனாம், செல்வக் கடுங்கோ வாழியாதனை: அப்பண்பு நலமெல்லாம் விளங்க, வாயாரப் பாராட்டி மகிழ்ந்தார். - . . . . . .