பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலா அம் பாசறை 89

நன்கு உணர்ந்தவர் அவர். தாங்கள் வலியுடையேம் என்னும் செருக்கால் அவன் மலையைக் கைக்கொள்ளக் கருதி வரும் பகைவருக்கும் அத்தும்பிகளின் நிலைதான் ஏற்படும் என்பதை உணருகின்றார். வாழியாதன் போரிடும் போர்க்களத்தை நேரில் கண்டு வியந்தவர் அவர். போர்ப் பயிற்சியில் நன்கு தேர்ந்த நாற்படையும் அவனிடம் இருந்தது. அவற்றுள்ளும் அவனது களிற்றுப் படையின் களப் போர்த்திறம் சொல்லும் திறன் உடையதன்று. போர்க்களத்தில் நிரை நிரையாக அவனது களிறுகள் அணிவகுத்துச் செல்கின்றன. மாற்றார் படையிலிருந்து களிறுகளோ பரிகளோ, காலாட்களோ எவை வரினும் எத்துணை வரினும் அவற்றைக் கொன்று உயிர்போக்கும் ஆற்றல் உடையவை அக்களிறுகள். இக்களிற்று நிரைகளின் முன்னே விண்ணிலே அசையும் வென்றி குறித்து உயர்ந்த கொடிகள் மாற்றாரை ஏங்க வைக்கின்றன. ஏந்திய படையினை இழந்தவர் வேறு படைகளைத் தேர்ந்தெடுக் கின்றனர். ஒளிவீசும் மணிகள் பதித்த கொம்புகளும்: வலம்புரிச் சங்குகளும் முழங்குகின்றன. -

போர் புரிந்து வீழ்ந்த மக்கள் மாக்களின் தினம் மலை ப்ோல் குவிந்து கிடக்கின்றது, பெரிய சிறகுகளை உடைய பருந்துக் அட்டங்கள் பிrங்களின் குருதியை உண்டு மகிழ்கின்றன. பினங்களின் தலை வெட்டுண்டு கிடக்க உடல் - மட்டும் ஆடுகின்றது. அதன் ஆட்டத்தோடு இணைந்து பேய்மகளும் ஆடுகின்

iறாள். அப்பேய்மகளின் தோற்றமோ! உலறிய தலையும், பிறழ்பல்லும், அகன்ற வாயும், சுழலும் விழிகளும், சூர்த்த நோக்கும் கொண்டு. அனைவரையும் அச்சுறுத்துகின்றது. இப்படிப் பகைவர் அஞ்சி நடுங்கும் பல போர்களிலும் வெற்றிக் கொடியை நாட்டியவன் அவன். - -

உலகெலாம் வியக்கும் அவனுடைய வெற்றிக்கெல்லாம் காரணமானவர் யார்? வீரமும் வலிமையு ம் என்றும்