பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 புலவர் கா. கோவிந்தனார்

தளரா மன உறுதியும் உடைய அவன் படை வீரர்களே தொடுத்தற்குரிய பூவல்லாத சேரர்க்கே உரி ய் பனந்தோட்டுடன், கொன்றை, உழிஞை, வாகை, தும்பை முதலான போர்ப் பூக்கள் தொடுத்த மாலை களை அணிந்துள்ளனர். பல போர்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர்கள், அவர்கள் முகத்திலும் மார்பி லும் வெற்றிக்கு அடையாளமான வீரவடுக்கள் நிறைந் துள்ளன. வாழியாதனுடைய நாட்டில் இறைச்சி விற்கும் கடைகளைக் காணுகின்றார் புலவர். முறுக்கொடு வளைந்த கொம்புகளையும், புெரிய கண்களையுமுடைய எருதுகளை யும், மற்ற விலங்குகளையும் வெட்டி இறைச்சிகளை விற்கு மிடங்கள் பல உண்டு. அங்கே பாசவரின் வெட்டும் அரிவாளால் ஊனைக் கொத்துவதால் இறைச்சி வைக்கப் பட்ட மரக்கட்டைகள் சிதைந்து வடுக்கள் நிரம்பியதாக உள்ளன. மார்பில் பூசப்பட்ட சாந்தின் அழகையும் மறைத்த வீரர்களின் வடுப்பட்ட முகத்தையும் மார்பையும் வடுக்கள் நிறைந்த இறைச்சி வெட்டும் மரக்கட்டையைப் போன்று இருப்பதாக உணருகின்றார் புலவர், -

'ஊனமர் குறடுபோல'விரும்புண்டு மிகுந்த

மார்பின்' (சீவக சிந்தர்மிணி. 22:31)

"செங்களந் துழவுவோன் சிதைந்து வேறாகிய படுமகன்’ (புறம்-278) - -

வீரத்தில் மட்டுமல்ல; கொடைச் சிறப்பிலும் தேர்ந் தவன் அவன், கொடுமண:ம், பந்தர் என்ற இரண்டு இடங் களும் அக்காலத்தே முறையே நன்கலங்கட்கும், உயரிய ழுத்துக்களுக்கும் பெயர் பெற்றிருந்தன. -

கொடுமணம் பட்டவினை மாணருங்கலம் பக்தர்ப் பயந்த பலர்புகழ்ழுத்தம் (பதிற்றுப்பத்து-74). * - - • * - 4 - . . به نه. - தன்னை நாடிவரும் பரிசிலர்க்கும் இவற்றையெல்லாம் வாரி வாரி வழங்கும் பெருமையுடைபவின் அவன. இசைவல்