பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பதிற்றுப்பத்து தெளிவுரை

நிகழ்ந்தன என்பதாம். 'இழியாத் திவவின் வயிரியமாக்கள்’ என்றது, நரம்புக் கட்டுக்கள் குலையாத யாழையுடைய வயிரிய மாக்கள் என்றதாம். இவர் முதற்கண் ஊர்மன்றத் தைச் சென்றடைந்து பாடிய பின்னர், தெருக்களின் பக்கங்களிலும் பாடிச்செல்வர் என்பதாம். மகளிருள் இருவகை யினரைக் கூறுகின்றனர். 'வள்ளை கொய்யும் வளைக்கை மகளிர்’ ஒரு சாரார். ’வெண் குருகு ஓப்பும் வெண்கை மகளிர்' ஒரு சாரார்; இவருள் பருவத்தால் சிறுமியர் வெண்கை மகளிர் என்பர்.

இனி, அவலிடிக்கும் இளமகளிர், அதனைக் கைவிட்டுச் சென்று வள்ளைப் பூக்களைக் கொய்து தங்களைப் புனைதலில் ஈடுபடுவர் எனவும், வெண்கை மகளிர் மரங்களிலிருந்த வெண்குருகுகளை ஓட்ட, அவை ஆரவாரித்து எழுதலால், வளைந்த நெல்லின் விளைவயலுள் பரந்த தடந்தாள் நாரைகளும் அஞ்சி அகன்றுபோம் எனவும் கொள்ளலாம். இவற்றால் எழும் ஆரவாரமன்றி, மக்கள் ஊரைவிட்டு வெளியேறிச் செல்லும் ஆரவாரம் எழாத வளநாடு என்பதாம். கடியகழற – கடுமையாக ஒலிக்க; ஒலியின் கடுமை அரசனின் கடுஞ்சினத்தை வெளிப்படுத்துவதாம். மாக்கண் - கரிதான கண்; கண் - முரசிடத்து அறையப்படும் இடம். கழற ஒலிக்க ஒலியின் மூலம் மறவர் போருக்குரிய அழைப்பை அறிவராதலின் 'கழற' என்றனர். நேரிகந்து - ஒப்பற்று; போரினை எதிரேற்றுக் கொள்வதிலே ஒப்பற்று; இது தம்பாலுள்ள மறமாண்பினால் ஆகும். 'ஆர் எயில்' பகைவரால் எளிதில் கடத்தற்கரிய கோட்டைகள். வரம்பில் எல்லையற்ற பெருக்கம். தானை பரவுதல் – படை பகை நாட்டைக் கைப்பற்றி நாற்புறமும் பரவி நிற்றல். வெண்கை மகளிர் - வெண்சங்கு வளைகளணிந்த கையினரான மகளிரும் ஆம்; இனி அடுதல் முதலிய தொழிலைச் செய்தறியாத கையினையுடைய சிறு மகளிர் எனலும் பொருந்தும். ’வளையைக் கையிலே அணிந்த மகளிர் வள்ளையைக்கொய்யச் சென்றனர்' என்று கூறிய நயத்தை உணர்க. வயிரிய மாக்கள் -கூத்தர்.

'இதில், இமயவரம்பன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் துறக்கம் வேண்டினார் என்பது குறிப்பு வகையால் கொள்ள வைத்தலின் இது வஞ்சிப் பொருள் வந்த பாடாணாயிற்று' என்பர் நச்சினார்க்கினியர் (தொல்-புறம். 25 உரை). 'வெண்கை மகளிர்