பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பதிற்றுப்பத்து தெளிவுரை

வார் துகிர் எடுக்கும்' என்றனர். இதனாற் கடல்படு பொருளின் பெருக்கம் உரைக்கப் பெற்றது. ’அலையால் மோதுண்டு தாழடும்பிற் சிக்கிய சங்கின் குரலைக் கேட்டு வந்தோர், முத்தும் பவளமும் பெற்றனர்’ என்றது, அடை கரைக் கானலிற் புன்னையம் பெருநிழலில் வெண்குருகோப்பி விளையாடிய இளமகளிர், தாம் எதிர்பாராதேயே முத்தும் பவளமும் அடைகின்ற பெருவளத்தைக் கொண்டன நெய்த னிலத்து ஊர்கள் என்பதாம்.

காந்தள் - காந்தளுள் ஒன்றாகிய செங்காந்தட் பூ; இவற்றை மகளிர் சூடார்; எனினும் கொலைவில் வேட்டுவர், தம் கொடுமை தோன்ற இவற்றைச் சூடுவர் என்றனர். கொலைவில் - கொலைக் கருவியாகிய வில்; பல உயிர்க் கொலைகட்குக் காரணமாகிய வில். வேட்டுவர் - வேட்டமாடி வாழ்வோரான மலைநாட்டவர். செங்கோடு - சிவந்த கொம்பு. ஆமான் - காட்டுப் பசு. பொன்னுடை நியமம் - செல்வ வளமுடைய கடைத்தெரு; இது வஞ்சிமூதூர்க் கடைத்தெரு ஆகலாம். பிழி - கள். நொடை - விலையாகத் தரும் பொருள். புன்புலம் - பாலைநிலம். 'குன்றுதலை மணந்த’ என்றது, இது குன்றந் திரிந்த பாலை என்பதற்கு.

காலம்- உரிய பருவ காலம். ஒழியாது - தீராது; அவ்வளவு மிகுதி என்றபடி. அரிகால் - நெல்லரியப் பெற்ற நிலப்பகுதி; அவித்தல் - போரழித்தல்; அரிகாற் பகுதியை உழக்கி உழுது சேறுபடுத்தியும் ஆம். பல பூ விழவு -பல பூக்களால் கொண்டாடப் பெறும் விழாக்கள்; விழாவுக்குப் பல பூக்கள் பயன்படுத்தப் பெற்றமை அறியப்படும். தேம் - தேன். 'தேம்பாய் மருதம்' என்றது, மருதம் புதுப்பூக்களுடன் விளங்கியதனைக் குறித்தற்கு. வண்டினம் மொய்க்கும் மருதமும் ஆம்; தேன் - வண்டு. பாய்தல் - மிக்குச் சொரிதல்; முதல்படக் கொன்று - அடியோடு வீழ வெட்டி. ’வெண் தலைச் செம்புனல்' வெண்மையான நுரைகளைப் போர்த்து வருகின்ற சிவந்த புதுப்புனல். வாய் - இடம்; வாய் மிகுத்தல் - இடமெங்கணும் மிக்குப் பெருகுதல். பதப்பர் - மணல் மேடாகிய கரை: பலசூழ் - பல வைக்கோலும் தழையுமாகச் சூழ்ந்திருக்க அமைக்கப் பெற்ற; இவை மணல் அரியுண்டு போகாமலிருக்க அமைப்பது; எனினும் புது வெள்ளம் இதனையும் அரித்துக் கரைக்கு மென்பார், 'பரிய' என்றனர். சிறை கொள்பூசல் - வெள்ளத்தை கரையுடைத்துப் போகாதபடி தடுப்பதன்கண் எழுகின்ற மக்களின்