பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்றாம் பத்து

107

ஆரவாரம் புகன்ற - விரும்பிய. ஆயம் - கூட்டம் காணூஉப் பெயரும் - காணும் பொருட்டாகச் செல்லும். வைப்பு - ஊர்கள்; பழனப்பால் - மருதநிலப்பகுதி.

ஏனல் - தினைக்கொல்லை. வரகு மீது இட்ட - வரகின் வைக்கோலைக் கூரை மேலாகப் பரப்பிய. கான் குளவி - காட்டு மல்லிகை ; கான் - மணமும் ஆம்; அப்போது கான்மிகு குளவிய என்பது மணமிக்க காட்டு மல்லிகைக் கொடிகளையுடைய எனப் பொருள்படும். வன்புசேர் - வன்புலஞ் சேர்ந்த. இருக்கை - இருப்பிடம்; குறிச்சி. நுவணை - மாவு. முறைமுறை பகுக்கும் - இன்னாருக்கு இவ்வளவு என்றவாறு முறைப்படி பகுத்தல்; தினைப் பயிரைக் கூடியே செய்த குன்றவர், விளைந்து கொண்ட தினையை மாவாக்கித் தமக்குள் பகுத்துண்ணும் கூட்டு வாழ்க்கை முறையைக் கூறியது இது. புன்புலம் - புல்லிய நிலங்கள் பொருந்திய பகுதி. புறவு-காடு. வைப்பு - ஊர்கள்.

செம்மல் - காய்ந்து சிவந்த சருகுகள். பயம்-பயன். மாறி - மாறுபட்டு; இல்லையாகப் போய்; இது கோடையின் வெம்மையால். அரக்கம் - செவ்வரக்கு. கோடு கொள்ளல். குன்றமாக அமைதல்; இது காற்றால் ஏற்படுவது. 'கழலொடு' - கழற்சிக்காயொடு; இது பிரிந்த காதலரின் வரவைக் கழலாற் காணும் பொருட்டுக் கொள்ளல். 'மகளிர் கழலொடு மறுகும்' என்றதற்கு, 'மகளிர் கழலணிந்த இளைஞரான தம் காதலரோடுங் கூடியவராக உடன் போக்கிற் செல்லும்' என்றலும் பொருந்தும். கடறு - காடு. 'பிறவும்' என்றது இவையல்லாத பிறவான ஊர் மக்களை.

இது, குட்டுவன் தன் வெற்றியின் நினைவாகக் கொற்றவைக்குப் பெரும் பலியூட்டிய சிறப்பைக் கூறுவது. பணை- முரசம். வேந்தர் - முடியுடைய மூவேந்தர். வேளிர் - வேளிர் குலத்தவராகிய குறுநில மன்னர். 'இவர் ஒன்று மொழிய, கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க' என்று கொள்க. முரண் - மாறுபாடு ; வலிமை. அதிர-எங்கணும் எதிரொலிக்க. 'அருந்திறல் மரபின் கடவுள்' என்றது, போர்க்குரிய கொற்றவையை; இவள் அயிரை மலைக்கண் கோயில் கொண்டிருப்பவள் ஆகலாம். உயர்ந்தோன்- பூசாரி. பிண்டம் – சோற்றுருண்டை. நெய்த்தோர் - இரத்தம். தூஉய-தூவிக்கலந்த. மகிழ் - கள். இரும்பலி –பெரும்பலி. மூசல் - மொய்த்தல், இறும்பூது- வியக்கத்தக்க