பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது.
 

நான்காம் பத்து

பதிகம்

ஆராத் திருவிற் சேர லாதற்கு
வேளாவிக் கோமான்
பதுமன் தேவி யீன்ற மகன்; முனை
பனிப்பப் பிறந்து பல்புகழ் நிரீஇ வளர்த்து
ஊழின் ஆகிய உயர்பெருஞ் சிறப்பின் 5

பூழி நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ,
உருள் பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச்செருவி னாற்றலை யறுத்து அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து
குருதிச் செம்புனல் குஞ்சரம் ஈர்ப்பச் 10

செருப்பல செய்து செங்களம் வேட்டுத்
துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேறலைக்
காப்பியாற்றுக் காப்பியனார்
பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்,
(1) கமழ்குரற்றுழாய், (2) கழையமல் கழனி,
(3) வரம்பில் வெள்ளம், (4) ஒண்பொறிக்கழற்கால்,