பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காம் பத்து

115

நான்காம் பத்து 115

திரண்டுள்ள. மண் கெழு ஞாலம் - மண்ணணுச் செறிந்த உலகம். ஒராங்கு - ஒரு சேர. மாதிரம் - திசை. நால்வேறு நனந்தலை . நால் வேருகப் பரந்துபட்ட அகன்ற இடம். தெள் - தெளிவு; ஒலியிற் குற்றமற்ற தன்மை. உயர்வு . சிறப்பு. வடித்தல் - வார்த்தல். எறியுநர் - அடிப்போர். கல்லென - கல்லென்னும் ஒலியெழ மணியை முழக்க. உண்ணு - உண்ணுத. பைஞ்ஞீலம் - பசிய இடம்; இடத் துள்ள மாந்தர்; இவர் நோன்பு ஏற்ருேர், ஞெமர்தல் - அமர் தல். திகிரி - சக்கரம். கண் பொரல் - ஒளி மிகுதியாற் காண்பார் கண்களைக் கூசச்செய்தல். குரல் - கொத்து; இது கொத்தான தன்ழயுமாம்; துளசி மாலை கட்டுவோர் இன்றும் தழையைக் கொத்தாக வைத்தே கட்டுதலைக் காணலாம்; பூங்கொத்துமாம். அலங்கல் - பெரிய மாலை; அசைந்தாடும் மாலை. செல்வன் - திருமால்; செல்வியின் கணவன். துஞ்சுபதி - வாழும் ஊர்.

மணி - நீலமணி. மணிநிறம் - கருநீலநிறம். மையிருள் . காரிருள். நிலாவிரிபு - நிலாக் கதிர்கள் பரவி. கோடு . முனை. கூடுதல். ஒன்று சேரல்; மூன்ரும் பிறைக் காலத்தே இரு முனை கொண்ட பிறையாக விளங்கிய தன்மைகெட்டு முழு மதியமான நிலைமை. இயலுறல் - தவழ்ந்து செல்லல். துளங்குதல் - அலைதல்; வறுமையால் வாடியலைந்த நிலை. விழுத்திணை - சிறந்த ஒழு க் கம். திருத்தி - திருத்தமுற அமைத்து; அவர் நிலை உயர்தற்கு வேண்டியன உதவி. முரசு கொண்டு - முரசத்தின் முழக்கினை மேற்கொண்டு; பகைவர் முரசங்களைக் கைக்கொண்டு எனலும் பொருந்தும். கிளர்தல் - ஒளி செய்தல். பூண் - பூணப்படும் பேரணி. வியன் மார்பு . அகன்ற மார்பு. கருவி. தொகுதி. வடதெற்கு விலகி - தென் வடலாகக் குறுக்கே அமைந்து. விலகு தலைத்து - மேகங்களைத் தடுக்கும் தலைப்பக்கத்தை உடையது. எழிலிய - அழகிய; மேகங்களைக் கொண்ட எனலும் ஆம். விண்டு விரை . விட்டுணுவுக்குரிய மலை; இது வேங்கடமலையினை; அன்றித் தி ரு மா ல் குடிகொண்டிருக்கும் நம்பிமலை யெனினும் பொருந்தும். ஆண்கடன் இறுத்தல்' என்றது, போரில் உதவிய தன் மறவர்க்கு வரிசையும் பரிசும் அளித்து என்ற தா.ம.

கடவுள் - கடவுளர்: தேவர்; அனைத்தும் கடந்தவர்.

இழைத்த - அமைத்த: க ட் டி ய. தூங்கல் - தொங்கல். கதவம் - கதவு. எழுஉ கணேய மரம். நிவத்தல் - நேரிதாக