பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

பதிற்றுப்பத்து தெளிவுரை

134 # பதிற்றுப்பத்து தெளிவுரை

காலன் அனைய கடுஞ்சின முன்பl வாலிதின், நூலின் இழையா நுண்மயிர் இழைய பொறித்த போலும் புள்ளி எருத்தின் 10

புன்புறப் புறவின் கனகிரை அலற அலர்தலை வேலத்து உலவை யஞ்சின்ைச் 彝 சிலம்பி மோலிய அலங்கல் போர்வையின் இலங்குமணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிரிழை தைஇ மின்னுமிழ்பு இலங்கச் 15

சீர்மிகு முத்தம் தைஇய நார்முடிச் சேரல் கின் போர்கிழல் புகன்றே.

நெளிவுரை : வெப்பையுடைய தும்பைமாலையைச் டியவராக, நின்பால் வெகுண்டெழுந்த பகைவர், அச்சம் ಫಿನ್ದಿ। போர்முனையிடத்தே கெட்டு அலறியோடும்படி யாகக் கடிப்பினை ஒச்சியடித்தலாலே முழங்கும், நின் போர் மறவரை ஏவுகின்ற அகன்ற முரசமானது, இடிக்குரலைப் போல அதிர்ந்து முழங்கப், போர்வெறி மிகுந்து நினக்கு அடங்காராக நின்னை எதிர்த்த பகைவரின், பிறரால் கடத் தற்கரிய அரணிடம் அழியுமாறு அவர்மேற் படைகொண்டு போரிடச் செல்லும், காலனையொத்த, போர்த்தொழில் துறையெல்லாம் முற்றவும் பயின்று தேறிய, கடுஞ்சினமும் வலிமையும் கொண்டோனே!

சிதைந்த உச்சியையுடைய வேலமரத்தின் உலர்ந்த கிளேகளிலே, பொறித்தது போலும் புள்ளிகளைக் கொண்ட கழுத்தையும், புல்லிய முதுகுப்புறத்தையுமுடைய புருவின் கூட்டங்கள் அஞ்சித் தம் ஒழுங்குகெட்டுச் சிதறிப்போக, வெண்மையாக, நூலாலே இழைக்கப்படாத நுண்மையான மயிர் போன்ற இழையையுடைய சிலந்திப் பூச்சிகள் தொடுத்த அசைகின்ற வலையைப்போல விளங்குகின்ற மணிகளை விளிம்பிலே பதித்த, பசும்பொன்னலாகிய கூட்டிடத்தே, ஒளிவிளங்கும் இழைகளிற் கோக்கப்பெற்று, மின்னலைப்போல ஒளிசெய்தபடி விளங்கச் செய்தமைத்த, சிறப்பு மிகுந்த முத்துவடம் தைக்கப் பெற்ற நார்முடி யணிந்த சேரலே! --