பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

பதிற்றுப்பத்து தெளிவுரை

148 பதிற்றுப்பத்து தெளிவுரை

தாமும் கூறும் மறவர் என்பர். 'கடும்பரிப் புரவி' என்றதனே "விரையச் செல்லும் பரியாகிய புரவி' என்று கொண்டு, *լյի* ஒடம் எனவும் பொருளுரைக்கலாம்; இது அவன் கடலிடைப் பகைவரை வென்ற்தனைக் குறிப்பதுமாகும். தாள். பாதங் கள்: முயற்சியும் ஆம்.

42. த்சும்பு துளங்கு இருக்கை !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு வண்ணம். தூக்கு செந்தூக்கு. பெயர்: தசும்பு துளங்கு இருக்கை. இதற்ை சொல்லியது: செங்குட்டுவளின் கொடை யும் வென்றியும் ஆகிய சிறப்புக்கள்.

(பெயர் விளக்கம் : வெற்றிவிழாவின் மகிழ்வினைக் குட்டுவ னும் அவன் மறவருமாகக் கொண்டாடுகின்றனர். அது காலைக் கள்ளின் வெறியாலே அவர்கள் கூத்தாட, அவர் கை களில் இருந்த குடங்களிலுள்ள கள்ளும் கூத்தாடிற்று. அத்தகைய இருக்கை என்ற நயத்தால் இப்பாட்டுக்கு இது பெயராயிற்று.)

இரும்பனம் புடையல் ஈகை வான்கழல் மீன்தேர் கொட்பின் பனிக்களம் மூழ்கிச் சிரல்பெயர்ந் தன்ன நெடுவெள் ளுசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்புசேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5

தும்பை சூடாது மலைந்த மாட்சி அன்னேர் பெரும! நன்னுதல் கணவl அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ! மைந்துடை நல்லமர்க் கடந்து வலந்தரீஇ இஞ்சிவீ விராய பைங்தார் பூட்டிச் 10

சாந்துபுறத்து எறிந்த தசும்புதுளங் கிருக்கைத் தீஞ்சேறு விளைந்த மணிகிற மட்டம் ஒம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து கோடியர் பெருங்கிளை வாழ ஆடியல் உளையவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15