பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் பத்து

149

ஐந்தாம் பத்து #49

மன்பதை மருள அரசுபடக் கடந்து முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர் ஒளிறுகிலை உயர்மருப்பு ஏந்திய களிறுர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்தரின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய 20

மாயிருந் தெண்கடல் மலிதிரைப் பெளவத்து வெண்தலைக் குரூஉப்பிசிர் உடையத் தண்பல வருஉம் புணரியிற் பலவே.

தெளிவுரை : கரிய பனந்தோட்டாலாகிய மாலையையும்: பொன்னுற் செய்த பெரிய வீரக்கழலையும்; மீனைப்பிடிக்கின்ற சூழ்ச்சியோடு சிறற்பறவையானது குளிர்ந்த களத்து நீருட் பாய்ந்து மூழ்கி மேலெழுந்த காலத்துத் தோன்றும் அதன் வாயலகைப்போல, வெள்ளுசியானது மூழ்கி மூழ்கி எழுந்து செயற்படுதலாலே தைக்கப்பெற்ற நெடிய தழும்பு பரந்த போர்ப்புண்ணின் வடுவானது பொருந்திய மார்பினையும்: அம்புகளாற் புண்பட்ட உடம்பினேயும் உடையவர்களாகப், போர்மேற்கொண்டு வந்தோரல்லாத பிறருடன் தும்பை சூடிப் பொருதலை மேற்கொள்ளாது, போர் குறித்தாருட னேயே போர்செய்த மாட்சியும் உடையவராகிய, அத்தகைய வரான மறக்குடிச் சிறந்தோர்க்குத் தலைவனே! நல்ல நெற்றி யுடையாளான வேண்மாளின் கணவனே! தலைமை சான்ற மானைகளையும் எதிர்நின்று அழிக்கும் போராற்றல் மிக்க குட்டுவனே!

பகைவருடன் செய்த வலிமையுடைய நல்ல போரிலே, அப்பகைவரை எதிர்நின்று பொருது வெற்றிகொண்டு, நின் வீரர்களுக்கு வெற்றிப்புகழைத் தந்தன! இஞ்சியும் பூவும் விரவிய பசிய தாரினேப் பூட்டிச், சந்தனம் புறத்தே பூசப் பெற்ற கட்குடம் அசையும் இடத்திலுள்ள, இனிய சேருக விளைந்து முதிர்ந்த, நீலமணியின் நிறத்தைக் கொண்ட கள்ளினைத் தனக்கென மட்டுமே பேணி வைத்துக்கொள் ளாது, அதனைப் பிறர்க்கும் கொடுத்தலாலே, அவர் எல்லாரும் வளவிய களிப்புச் சுரந்து நிறைபவராயினர். கூத்தரது பெரிய சுற்றமானது வாழ்வினைப் பெறும்படியாக, அசையும் இயல் பின்யுடைய தலையாட்டமணிந்து விளங்கும் செருக்குடைய குதிரைகளை நீ வழங்கிய்ை. அந்த நின் கொடைச் செயலை நினைந்தால்- -