பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

பதிற்றுப்பத்து தெளிவுரை

150 பதிற்றுப்பத்து தெளிவுரை

கண்டும் கேட்டும் அறிந்த மக்கள் வியப்படையும்படி யாகப் பகையரசு அழிவெய்துமாறு போரினை வ்ென்றன. முற் பட்ட போர்வினையானது எதிர்வரப் பெறுதலைக் காணும் பொருட்டாக, நின் தேர்மறவரோடு கூடிய ஏனை மறவர் சுற்றமெல்லாம் உலகமெங்கணும் மொய்த்தபடி நிற்பாரா யினர். ஒளிறுகின்ற நிலையையுடைய உயர்ந்த மருப்புக்களை ஏந்திய களிற்றுயானைசளின் மேலாக ஊர்ந்தபடி செல்லும், மானத்தையுடைய வலிமிக்க வீரரோடு, பிற மன்னர்களும் நின் வெற்றியைப் போற்றிப் பாராட்டினர். கரிய பெரிய தெளிந்த கடலினது மிக்க திரைகளையுடைய பரப்பில், நுரை யாகிய வெள்ளிய தலையினையுடைய நிறமுள்ள பிசிர்களாகச் சென்று கரைக்கண் மோதி உடையும்படியாகத், தண்ணிய பலவாக வரூஉம் அலைகளைக் காட்டினும், நீ அன்று வழங்கிய குதிரைகள் பலவாகும், பெருமானே! 哪

சொற்பொருள் விளக்கம் : இரும் பனம் புடையல் - கரிய பனந்தோட்டாலான மாலை. ஈகை . பொன். வான்கழல் - சிறந்த கழல்; பெரிய கழலுமாம். கொட்பு - சுழற்சி. கயம் - குளம். சிரல் - சிரற்பறவை. நெடுலசி - நீண்ட கூர்மை பரவிய தழும்பு. அம்புசேர் உடம்பினர் - அம்பு தைத்த வடுவிளங்கும் உடலினர். 'தும்பை வெற்றி குறித்துச் செல்லும் போருக் குரிய அடையாள மாலை. நன்னுதல்' என்றது, வேண் மாளை.

மைந்து - வலிமை, வஞ்சனையாற் பகைவரை வெற்றி கொள்ளாது, அவர் படையோடு எதிரிட்டு மோதிப் போரிட்ட் தளுல், நல்லமர் என்றனர். வலந்தரல் - வெற்றியைத் தர்ல்; படைமறவர் திறனை உடையவரேனும், வெற்றிக்குக் குட்டுவனின் தலைமையே சிறந்த காரணமாதலால், அவன் வெற்றியைத் தந்ததாகக் கூறினர். திறனுடைத் தலைமை பெருதவிடத்துச் சிறந்த படைப் பெருக்கமும் சிதைவுறும் என்பது தெளிவு. கட்குடத்திற்கு இஞ்சியும் பூவுமாகக் கலந்து கட்டிய மாலையைச் சூட்டியிருப்பர் என்பது இதல்ை அறியப்படுகின்றது. மது நுகர்தற் காலத்து இடையிடைக் கறித்து இன்புறுதற்கு இஞ்சியும், மோந்து இன்புறுதற்குப் பூவும் பயன்பட்டன. சாந்து - சந்தனச் சேறு. இதனைப் புறத்தே பூசுதல் நறுமணத்திற்கும் பானத் கசிவைத் தடுத் தற்கும் ஆம். தசும்பு - கட்குடம். துளங்கல் - அசைதல். இருக்கை - களித்தற்குரிய இருப்பிடப் பகுதி. கட்குடம் அசைந்தாடலாவது, கள்ளுண்பார் களி வெறியால் ஆட அவ