உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

பதிற்றுப்பத்து தெளிவுரை


அனையை யாகல் மாறே எனையதூஉம்
உயர்நிலை உலகத்துச் செல்லாது இவணின்று 10

இருநில மருங்கின் நெடிதுமன் னியரோ!
நிலம்தப இடூஉம் ஏணிப் புலம்படர்ந்து
படுகண் முரசம் நடுவண் சிலைப்பத்
தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்
ஏவல் வியங்கொண்டு இளையரொடு எழுதரும் 15
 
ஒல்லார் யானை காணின்
நில்லாத் தானை இறைகிழ வோயே

தெளிவுரை: பகைத்தோரது நிலப்பரப்புக் குறைவு படுமாறு, அவரது நாட்டகத்தே செல்வாய்; அவர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிற் பாசறைகளை அமைப்பாய்; ஒலிக்குங் கண்ணையுடைய போர்முரசமானது அப் பாசறைகளின் நடுவே அமைந்திருந்து முழங்கும்; அம் முழக்கம் படை மறவரை ஏவ, அதனைக் கேட்ட அம் மறவரும் தம் வலக்கைகளில் தண்டுகளை ஏந்தியவராகப், பகைவர்க்கு அச்சத்தைச் செய்யும்பொருட்டு எழுவர். அம் முரசொலியின் ஏவலை மேற்கொண்டவராக அவர் பகைவரை நோக்கிச் செல்வர். இளையவரான மறவர் துணையோடு போர்க்கெழுந்த பகைவேந்தரின் யானைப்படையைக் கண்டால், நொடிப் பொழுதேனும் நில்லாது சென்று, அவற்றைத் தாக்கி யழிப்பர். அத்தகைய மறத்தையுடைய தானைக்கு அரசனாக விளங்கும் உரிமையினை உடையோனே!

நீதான் வள்ளன்மை உடையை என்று சான்றோராற் பாராட்டிக் கூறப்படுதலினாலே, யானும் நின்னைக் காணற் பொருட்டாக வந்துள்ளேன். யான் கருதியதையும் முடித் தருள்வாயாக. நின் கண்ணி வாழ்வதாக.

அகன்ற சந்து பொருந்திய வளைகளணிந்த, பெருத்த மூங்கிலைப் போலும் பருத்த தோள்களையும், உயர்ந்த அழகினையுடைய குளிர்ச்சி பொருந்திய கண்களையும், தொய்யில் எழுதப்பெற்றுப் பூரித்து வருதலையுடைய இளங் கொங்கைகளையும், பூத்தொழில் விளங்கும் துகில் பொருந்திய அல்குற் பகுதியையும், வண்டினம் மொய்க்கும் கூந்தலையும், மின்னலிடும் அணிகளையும் கொண்டோர் விறலியர். அவர் தாம் நின் போர்மறத்தைப் போற்றிப் பாடுவர். அதனைக் கேட்டாயான நீயும் அவ்விறலியருக்கும், அவரோடு சேர்ந்த பாணர் முதலாயின பிற இரவலருக்கும் அவரது