பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் பத்து

205

ஆரும் வந்து žő$

வீராக! பரிசின் மாக்களே! அவன் புகழையெடுத்து நீவிர் பாடுவீராக! - *

சொற்பொருளும் விளக்கமும் : தோடு-பனங்குருத்து. பூங் குவளை - அழகிய குவளை மலர்: செங்குவளையும் ஆம். 'குவளை யர்' என்பது முற்றெச்சம். முகம் - கூர்வாய். பொறித்தல் . தாக்கிப் புண்படுத்தல். அசைத்த - கட்டிய. மாண்வரி . மாட்சியுடைய தழும்பு: மாட்சி போரிற்பெற்ற விழுப்புண் .ணின் வடுவென்னும் சிறப்பினுல். யாக்கை - உடம்பு. யாக்கையர் . யாக்கையராகிய மறவர். செல் - இடியேறு. பகைவராகிய அரவுகளைத் தம் போர்முழக்கத்தாலேயே | செய்து புறங்காணும் சிறப்பினர் என்பதல்ை, "செல்லுறழ் மறவர்’ என்றனர். கொல்படை - கொல்லற் ஐ; படைக்கலன். தரீஇயர் - கைப்பற்றிவரும் பொருட்டு: சய்யியர் என்னும் வாய்பாட்டு வினையெச்சம். படை மறவர் போரைக் குறித்த செலவின்கண், தம் படையை எடுக்குங் காலத்தே சூளுரைத்தவராக எடுப்பது மரபு. 'நீளிலை எஃகம் மறுத்த உடம்பொடு, வாரா உலகம் புகுதல் ஒன்றெனப் படைதொட்டனனே குருசில்' எனத் தலைவ ளுெருவன் வஞ்சினமுரைத்தலைப் புறநானூற்றுட் காணவாம் (புறம். 341). மண்புனை இஞ்சி - அரைத்த மண்ணுலே அமைந்த இஞ்சி, இஞ்சி மதிலுறுப்புகளுள் ஒன்று: அரைத்த மண்ணுல் சுவர் எழுப்பலைப் புறநானூறு, அரைமண் இஞ்சி' (புறம் 341) எனக் கூறும். இனி, வெண்தோட்டு அசைத்த ஒண்பூங் குவளையராகிய மறவர், தம்மைப் பகைத்து மேல் வந்தாரான, வாள் முகம் பொறித்த மாண்வரி யாக்கைய ரான செல்லுறழ் மறவர்தம் கொல்படையைக் கைக்கொள் ளும் பொருட்டுக் கூறிய வஞ்சினமாகவும் கொள்ளலாம்.

மதில்கடத்தல் -, மதிலேயழித்துக் கைக்கொள்ளுதல். புகா , உணவு. கண்ணி - தலைக்கண்ணி; இது உழிஞைமாலை. கண்ணிய - க ரு தி ய வயவர் . மற்வர். தாம் சூடிய கண்ணிக் கேற்ப வினேசெய்தலைக் கருதிய வயவர் என்க. படுபு - பட்டு செய்பு என்னும் வினையெச்சம். வஞ்சினம் கூறியவழி, அது பிழைபடலின்றி வினையை முடிப்பவரர்தலின் 'பொய்ப்டுபு அறியா வயங்கு செந்நாவினர்' என்றனர். வயங்கல் - விளங்கல். எயில் எறி மதிலைத் தகர்க்கும். வல்வில் - வலியமைந்த வில். எயில் எறி வல்வில்' எனவே வில்லின் சிறப்பு விளங்கும். ஏ - அம்புத் தொழில். ஏவிளங்கு தடக்கை' - அம்பை ஏவும் தொழிலுக்குரிய கூறுபாடுகள் எல்லாம் விளங்கும் தடக்கையும் ஆம். ஏந்தெழில் . உயர்ந்த