பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழாம் பத்து

243

ஏழாம் பத்து .243 ضج

அவரும், நின்னைப் போலவே, மாறுதலில்லாத சிறந்த கொள்கையாளர்கள். ஆதலினலே, இம் மண்பொருந்திய உலகினைத் தளர்ச்சியின்றி ஆண்டுவந்தன்ர்!

சொற்பொருளும் விளக்கமும் : மலையுறழ்யானை-மலைகளைப் போலத் தோன்றும் பெரிய யானைகள். வெல்கொடி - வெற்றிக் கொடி. வயின் வயின் - இடங்கள் தோறும். கால்காற்று. கடியவுரற கடுமையாக ஒலிக்க. எறிந்து - பகை வரை வெட்டி வீழ்த்தி. இலை தெரிந்த வேல்' என்றது. இலை கறைபட்டுத் தோன்றிய வேல் என்றதாம். ஆய்ந்த . ஒய்ந்த. இவர்களிடையே ஆய்ந்து தெரிந்த, மேலும் போரை விரும்பும் மறவரோடு மேற்சென்று என்க. றங்க - விளங்க. பயிற்றிய . நாட்டிற் பயின்று வாழச் செய்த.

அசைவு-தளர்ச்சி. கொள்கை - கோட்பாடு. அசையாது. தளராது. மண்கெழு ஞாலம் - மண்ணணுச் செறிந்த உலகம். பயம்-விளைவு. சுடர் - ஞாயிறு. வெள்ளி. சுக்கிரன். ஆரியம் . நலந்தரும் பிறகோள்கள். விசும்பு மெய் அகல - விசும்பிடம் விரிவடைய. பெயல் . மழை. புரவு எதிரல் - உயிர்களைக் காத்தலை மேற்கொள்ளல்; நனந்தலை - பரந்த இடம்; என்றது, நாற்றிசைப் பகுதி நாடுகளையும். நந்த - விளைவால் பெருக்கமடைய பகையின்றி விளங்க என்பதுமாம்.

தூக்கு விளக்கம் : எறிந்து சிதைந்த' என்பது முதலாக, மறவரொடு என்பது ஈருக நான்கடி வஞ்சியடியாய் வந்த மையால் வஞ்சிதுக்கும் ஆயிற்று.

70. பறைக்குரல் அருவி !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் : ஒழுகுவண்ணம். தூக்கு : செந்தூக்கும் வஞ்சித்துக்கும். இதனுற் சொல்லியது : வாழியாதனின் வென்றிகூறிய திறத் தான்ே. அவனுக்குள்ள சிறப்பினைக் கூறிப் பின்ன்ர் வாழ்த்திய உாறும் ஆம்

(பெயர் விளக்கம் : அருவியின் ஒலிக்குப் பறையோசையை உவமை கூறினமையானும், அதுதான் இவ்வுலகிற்கேயன்றி அவ்வுலகிற்கும் கேட்கலாயிற்று என்ற சிறப்பானும், இதற்கும் 'பறைக்குரல் அருவி' என்பது பெயராயிற்று.)