பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

பதிற்றுப்பத்து தெளிவுரை

#43 பதிற்றுப்பத்து தெளிவுரை

ஆய்ந்துதெரிந்த புகல்மறவரொடு படுபிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடுகுடி பயிற்றிய கொற்ற வேர்தே! 10 நின்போல், அசைவில் கொள்கைய ராகலின் அசையாது ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்!" நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப் பயங்கெழு வெள்ளி ஆரியம் நிற்ப விசும்புமெய் அகலப் பெயல்புரவு எதிர 15 நால்வேறு கனந்தலை ஒராங்கு கந்த இலங்குகதிர்த் திகிரி முந்திசி னேரே. தெளிவுரை : மலையொத்த யானையின்மீதுள்ள, வாகனத் தடவுவதுபோல விளங்கும் வெற்றிக் கொடிகள், மலைமீதி னின்றும் வீழ்கின்ற அருவிகளைப்போல இடந்தோறும் விளங்கி அசைந்தபடி இருக்கும். கடலேப்போல ஆர்த்தெழும் தானப் பெருக்கத்தின் கடுங்குரலே எழுப்பும் போர்முரசங்கள், காற் ருல்ே தாக்கப்பெற்ற கடலினது அலையொலியைப் போலக் கடுமையாக ஒலிக்கும். இவ்வாறு பகைமேற்சென்று போரிட்ட காலத்தே, பகைவரை வெட்டி வீழ்த்தியதேைல சிதைவுற்ற வாள்களோடும். பகைவரைக் குத்தியதஞலே இலைவடிவிற் குருதிக்கறை படிந்து தோன்ற விளங்கிய வேல்களோடும், ப்கைப்படையைப் பாய்ந்துபாய்ந்து தாக்கியதஞற் சோர்ந்த குதிரைகளோடும், ஆராய்ந்து - தெரிந்தெடுக்கப் பெற்ற போரைவிரும்பும் மறவரோடும் சென்று, மீளவும் எதிர்த்தா ரான பகைவரது பட்டுவீழ்ந்த பிணக்குவியல்கள் எப்புறமும் விளங்க அவரையும் கொன்று, அப்பகைவரது கொடுங் கோலாட்சியால் கெட்டுப்போன குடிமக்களை மீளவும் அந் நாட்டிலேயே பயின்று அமைதியாக வாழுமாறு செய்த கொற்ற வேந்தனே!

நிலமெல்லாம் சிறந்த விளைவைத் தரவும், கதிரவனது வெம்மையான கொதிப்புத் தணியவும், உலகிற்குப் பயன் பொருந்திய வெள்ளியானது நல்ல கோள்களுடன் சேர்ந்து நிற்கவும், வானத்திடம் அகலவும், மழையானது பெய்து உலக்ைக் காத்தலை மேற்கொள்ளவும், நால்வேருண திசைப் பகுதிகளும் ஒருப்போலவே செழிப்படையுமாறு, விள்ங்கும் கதிர்களோடு கூடிய ஆணேச்சக்கரத்தைச் செலுத்தியவர்கள் நின் முன்னேர்.