பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

பதிற்றுப்பத்து தெளிவுரை

262 பதிற்றுப்பத்து தெளிவுரை

அமைச்சு நட்பு அரண் போல்வன. வீறு - சிறந்த சிறப்பு. இவணர் . இவ்வுலகத்தார். கடன்-கடமை. இறுத்த செய்து முடித்த செறுப்புகல் - போரை விரும்பும். முன்பன் . வலியுடையோன். *

மருட்சி - மயக்கம்; வியப்பு. நின் வயின் - நின்னிடத்து. ஒழுக்கும் . கடைப்பிடித்துச் செலுத்தும். மூதாளன் - முதிய வன். வண்மை - கொடை. மாண்பு - சிறந்த குணங்கள். வளன் - செல்வம். எச்சம் - மக்கள். வேறுபடு - நாட்டினின் றும் வேறுபட்ட காடு, புரோகித நெறியினின்றும் வேறுபட்ட தவநெறி. நனந்தலே - பரந்த இடத்தையுடைய காடு. படிமை - தவவொழுக்கப் ப்ெருமை. இதல்ை, பெருஞ் சேரல் இரும், பொறை இராஜயோகியாக விளங்கினன் ←Ꭲ ©yᎢ ᎧaᎢ ᎥᏝ ,

75. தீஞ்சேற்று யாணர் !

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணம் ஒழுகு வண்ணம். தூக்கு: செந்தூக்கு. பெயர்: தீஞ்சேற்று யாணர். சொல்லியது: பெருஞ்சேர்லின் வென்றிச் சிறப்பு.

(பெயர் விளக்கம் : இனிய பாகானது இடையறவின்றிப் புதுவரவாய்க் கிடைப்பது என்னும் நயம் தோன்றத் தீஞ் சேற்று யாணர் என்றதால், இப்பாட்டு இப் பெயரைப் பெற்றது.)

இரும்புலி கொன்று பெருங்களிறு அடுஉம் அரும்பொறி வயமான் அனையை! பல்வேல் பொலந்தார் யானை இயல்தேர்ப் பொறைய! வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து கின்வழிப் படாஅ ராயின் கென்மிக்கு 5

அறையுறு கரும்பின் தீஞ்சேற் றியாணர் வருநர் வரையா வளம்வீங்கு இருக்கை வன்புலந் தழிஇ மென்பால் தோறும் அரும்பறை வினைஞர் புல்லிகல் படுத்துக் கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் 10