பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளஞ்சேரல் இரும்பொறையப் பெருங்குன்றுர்கிழார் பாடியது

ஒன்பதாம் பத்து

பதிகம்

குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன் வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்ற மகன் வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ அருமிளைக் கல்லவத்து ஐந்தெயில் எறிந்து 5

பொத்தி ஆண்ட பெருஞ்சோழனையும் வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி மந்திர மரபின் தெய்வம் பேணி 10 மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு வேள்விப் புரோசு மயக்கி அருந்திறல் மரபின் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ ஆய்ந்த மரபின் சாந்தி வேட்டு 15 மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல் இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றுார் கிழார் பாடினர் பத்துப்பாட்டு! பாட்டுகளின் பெயர்கள் : 1. நிழல்விடு கட்டி, 2. வினை நவில் யானை, 3. பஃருேற்ருெழுதி. 4. தொழில் நவில்யானை, 5. நாடுகாண் நெடுவரை 6. வெந்திறல் தடக்கை, 7,