பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒன்பதாம் பத்து

303

வில்லிட்டு, நீலமணிபோலத் தொகுதி கொண்டு, வானை முட்டும் மலைமுகட்டைச் சேர்ந்து மழை பொழிந்ததாக, அதனால் பக்க மலையிடத்தே அருவி வீழ்வதற்கு உவமித்து உரைக்கின்றனர். மாகம்-திசை. உகக்கும் - உயர்ந்து செல்லும்.

கார் தோன்றியது; இனியும் அவள் பிரிவுத் துயரத்தினை பொறுத்திருக்கல் ஆற்றாள் என்பதும் ஆம்.


89. துவராக் கூந்தல் !

துறை: காவன்முல்லை. வண்ணம்: ஒழுகு வண்ணம். தூக்கு : செந்தூக்கு. இதனாற் சொல்லியது : இளஞ்சேரல் இரும்பொறையின் நாடுகாவற் சிறப்புக் கூறியது.

[பெயர் விளக்கம்: எப்பொழுதும் தகரச் சாந்து முதலியன தடவுகையால் ஈரம்புலராத கூந்தல் என்று உரைத்த சிறப்பால் இப்பாட்டுப் இப்பெயர் பெற்றது. நாடுகாவலைக் கூறியமையால் காவன்முல்லை ஆயிற்று.)

வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமான் ஏறுபுணர்ந்து இயலப்
புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்பப்
பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது
பல்லான நன்னிரை புல்லருந்து உகளப் 5

பயங்கடை அறியா வளங்கெழு சிறப்பின்
பெரும்பல் யாணர்க் கூலம் கெழும்
நன்பல் ஊழி நடுவுநின்று ஒழுகப்
பல்வேல் இரும்பொறை! நின்போல் செம்மையின்
நாளின் நாளின் நாடுதொழுது ஏத்த 10

உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்டு
அடங்கிய நெஞ்சம் புகர்படுபு,அறியாது
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனத் 15