பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

பதிற்றுப்பத்து தெளிவுரை

ஊழி யனைய வாக; ஊழி
பதிற்றுப்பத்து தெளிவுரை
வெள்ள வரம்பின ஆக; என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே: செருமிக்கு 55
உருமென முழங்கும் முரசின்
பெருநெல் யானை இறைகிழ வோயே!

தெளிவுரை : வானத்துக் கோள்கள் அவையவை மழை பெய்வதற்கு உரியவான இடங்களிலே முறையாக நிற்க, அதனால் மழையும் முறையாகப் பெய்யும். அதனால், எங்கணும் வளம்பெருக, உயிர்கள் அச்சமற்றுத் துன்பத்தின் நீங்கி இன்பத்தில் திளைக்க, அவைகட்குக் காப்பாளனாக அமைந்தவன். எங்கணும் இன்பம் பெருகுதற்குச் செய்வதற் கென்றே தோன்றியவன். தமக்குத் துணையாக அமைந்த துறையினிடத்தே யாதும் குறைவின்றி அனைத்தையும் நிறைவாகக் கற்றவன்.

மிகுதியான ஆற்றலுடைய பகைவர் செய்யும் போரிடத்தே, அவரது கடுமையான வலிமைக்கு அஞ்சாதே எதிர் நின்று,ஒளி செய்யும் வாளையுடைய அவ்வெற்றி வேந்தரது போர் யானையோடு, அவரது கலங்களையும் பறித்து வரும் வெற்றிச்சிறப்புடையவன். அவரிடமிருந்து பறித்து அவற்றை அவர் பணியவும் மீளவும் அவருக்கே தந்து, 'யாம் பழைய நட்பினேம்' என நட்புக்கூறி, அவர்க்கு அருள்பவன். அவரும் பின்னர்த் தன் ஏவலின்படி கேட்டு நடக்க, அகன்ற உலகிடத்தே கதிரவனைப்போல நடுநிலையோடு நின்று ஆட்சிசெய்தவன்.

கெடாத தன் பலவான புகழ்களும் அகன்ற வானிடத்தும் சென்று பரவுமாறு, தன் வாளின் வலிமையாலே பகைவரை அழித்துச் சிறந்தவன். செம்மையே பூண்டு ஒழுகியவன். அத்தகையோனாகி, அறக்கடவுளும் தன்னை வாழ்த்த, நன்னெறியோடு அரசாண்ட வெற்றியாளனாகிய மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் ஆற்றலமைந்த குடிவழியில் தோன்றியவனே!

அனைத்துயிரிடத்தும் குளிர்ச்சியான அன்புடைமை பாராட்டுதலை உடைமையினாலே நிதான் நீரினை ஒப்பவனாவாய். நின் திறந்தான் அளந்தறியப்படாத அருமையினை