பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

பதிற்றுப்பத்து தெளிவுரை

326 பதிற்றுப்பத்து தெளிவுரை

காக்கைக்கு விருந்து செய்யும் மரபுபற்றிக் காக்கைப் பாடினியார் வரலாற்றுள் அறிந்தோம். இவரோ கார் காலத்து வருவேன்' என்ப் பிரிந்துசென்ற காதலனின் வரவை நினைந்து வருந்தியிருக்கும் மகளிர்,மழைமேகத்தின் தோற்றங் கண்டதும், அதனைப் ப்ராவிப் பலியிட்டு வழிபடுவதுபற்றித் தம் நற்றிணைச் செய்யுளுள் குறிப்பிடுகின்ருர். குறிஞ்சித்திணை. யின் காட்சிகளை இயற்கையழகு கொஞ்சித் துளும்ப அமைத்துப் பாடியவர் இவர் என்பதனை இவரது அகத்துறைச் செய்யுட்கள் பலவும் காட்டும். r

"சுரும்பார் சோலைப் பெரும் பெயர்க் கொல்லி’ எனக் கொல்லிமலையை இவர் வியந்து கூறுவர். கபிலர் பெருமானின் சிறப்பையும், அவர்க்குப் பெரும்பரிசில் அளித்துப் போற்றிய செல்வக் கடுங்கோ வாழியாதனின் வள்ளன்மையையும் போற்றுவார் இவர். மாகஞ் சுடர மாவிசும்பு உகக்கும் ஞாயிறுபோல விளங்குதி பன்ஞள்' என்ற வாழ்த்துரையிலே, இளஞ்சேரலின் மாண்பும் வள்ளன்மையும் எழிலோடு ஒளிர் கின்ற செவ்வியைக் காணலாம்.

பயங் கடை அறியா வளங்கெழு சிறப்பின், பெரும்பல்

யாணர்க் கூலங்கெழுமி, நன்பல்லூழி நடுவுநின்று ஒழுகப், பல்வேல் இரும்பொறை நின்கோல் செம்மையின், நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந் தோர்_பரவ,_அரசியல் தழையாது செருமேந் தோன்றி, நோயிலை யாகியர் நீயே என்னும் வாழ்த்துரைஅறவுர்ை யாவும் விளங்குதலைக் கண்டு இன்புறலாம்.

இவ்வாறு நயமும் செம்மையும் நல்லறிவு விளக்கமும் ஒருங்கே இணைந்து கலந்து இனிமையூட்டும் வகையால் சிறப் போடு விளங்குவன இவர் செய்யுட்கள் ஆகும்.

இளஞ்சேரல் பரிசில் நீட்டித்தபோது மனம் வெதும்பிய வராக, நும்மனேரும் மற்று இனையர் ஆயின், எம்மனேர் இவண் பிறவலர் ம்ாதோ' என்று கூறுகின்றதல்ை, இவரது வாழ்வியல் நிலையையும், புலமைச் செவ்வியையும், உறுதிப் பாட்டையும் நாம் அறியலாம். g