பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் பத்து

71

மூன்ரும் பத்து 函 71

காலமாகக் கழிய, எண்ணெய் பூசாவிடத்தும் நறுமணமே கமழ்தலைக் கொண்டதாய்க், கார்காலத்து மலரான முல்லை யின் நறுமணத்தைக் கமழ்ந்து கொண்டிருக்கும், தாழ்ந்த கரிய கூந்தலையும், நாளத்தின் நீங்கியனபோல, இரவுப் போதிலும் மல்ர்ச்சி நிலைபெற்று, அழகிய முகத்திடத்தே சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்களையும், அசைகின்ற காந்தள் மலர்கள் விளங்கும் கரையையுடைய நீர்யாற்றின் கரையிடத்தே நின்ற மூங்கிலையொப்ப விளங்கும் பெருத்த தோள்களையுமுடைய, நின் தேவியாகிய இவளுடனே கூடி யிருந்தவகை, நீதான் பலவாயிர வெள்ளம் ஆண்டுகள் வாழ் வாயாக, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : சொல் - சொல்லிலக்கண நூல். பெயர் . பொருளிலக்கண நூல். நாட்டம் - சோதிட நூல். கேள்வி . வேதம். நெஞ்சம் - மனம். எவ்வம் - உயிர் வருத்தம். சூழ்தல் - கருதுதல். கொள்கை-ஒழுக்கம்; விரதம். காலை - சூரியன்; இவன் தான் தோன்றலில் பொய்த்தல் இலன்; இவ்வாறே வாய்மையும் என்றும் பிறழ்தல் கூடாது என்பதாம். சீர். சீர்மை. உரு.உட்கு. எவ்வம் சூழாக் கொள் கையும், காலையன்ன வாய்மொழியும் உடையவர் என்க: இவரே யாகஞ் செய்வதற்குரியவர். பேணியர் - பேணும் பொருட்டாக. தீ - யாகத் தீ. சுடர் - நெருப்புக்கொழுந்து. விரும்பு - விருப்பு. வேள்வி- ஒன்றை விரும்பி வேட்பது; அவ் விருப்பம் மெய்யாவதுபோலப் பரந்த பெரும்பெயராவுதியும் ஆம்- பெரும்பெயர் ஆவுதி - பெரும்பொருளைத் தருவதான ஆவுதி: பெரும்பொருள்ாவது கட்வுளரால் மட்டுமே தரப் ப்டுவது. வேள்வி செய்வார்க்கு வேண்டிய தகுதிகள் முறையே சொல்லப்பெற்றன. அவை சொல், பெயர், நாட்டம், வேள்வி, நெஞ்சம் என்னும் ஐந்தையும் ஒருங்கே போற்றி, அவையே துணையாகப் பிறவுயிருக்கு எவ்வஞ் சூழாது விளங்கிய கொள்கையும், காலையன்ன சீர்கால் வாய் மொழியும் கொண்ட தன்மை; இவ்வாறு, இவரான் மட்டுமே செய்வது வேத வேள்வி.

வருநர் - வரும் பரிசிலர். வாரல் . அளவின்றி வேண்டு மளவுகொள்ளல். விருந்து கண்மாறல் - விருந்தினர் இவ் விடம் வேண்டாவென்று பிறவிடம் நோக்கிப் போத்ற்கு முற்படல், பாசவர் - ஆட்டு வாணிகர். ஊனம் - ஊனைக் கொந்தும் மணக்கட்டை சோறும் கறியும் சேர்த்துச் சமைத்த உணவு இது. குய்யிடல் - தாளித்தல். ஆனது ஆர்ப்ப - சட்டியிலிடும்போது ஒலி மிக்கு எழ. நகர் -