பக்கம்:பதிற்றுப்பத்து.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

பதிற்றுப்பத்து தெளிவுரை

94 பதிற்றுப்பத்து தெளிவுரை

கேட்டறியாத நல்லவளநாட்டின் புதுவருவாய் குறைபட்டுப் போகாத அனைவரும் விரும்புத்ற்குரிய் அழகானது, நீதான் வெகுண்டனையாய்ச் சின்ந்து பார்த்ததனலே, இதுகாலை சிதைந்து போவதாயிற்று, பெருமானே!

சொற்பொருளும் விளக்கமும் : தொடர்ந்த குவளை ஆண்டுதோறும் பயிரிடுதலை வேண்டாது, முதலில் இட்டதே ஈடாகத் தொடர்ந்து தழைத்து மலரும் குவளை; இந்தக் கருத்தினைக் கூறும் சிறப்பாலே இப்பெயரை இப்பாட்டுப் பெற்றது. தாநெறி - புறவிதழ்கள் களையப்பெற்ற முழுப்பூ. அட்ைச்சி - நிறையச் சேர்த்து. ஆம்பல் - அல்லிப் பூ அக மடிவை - நடுநடுவே தைத்துத் தொடுக்கப்பெற்ற தழை யுடை: பசிய தளிரும், நீலக் குவளையும், சிவந்த அல்லி மலரு மாகத் தொடுத்த தழையுடை மயிலின் தோகையொப்ப விளங்கும் என்க: இதனையுடுத்த அவர் துறையணி மருதத்து ஏறிக் குரலெழுப்பத், தம்மினம் என மயங்கிய மயிலினம் தாமும் ஆடலைத் தொடங்கின என்க. எல் - ஒளி. தெள்விளி - தெளிந்த விளிக்குரல். பழனம் - வயல். கா. சோலை. இயவர் - இசைபாடுவோர்; இனி கூடு இயவர் . சுருதியோடு இனிதாகப் பொருந்துகின்ற வாச்சியங்களைக் கொண்டோ ரான இயவரும் ஆம். குவளைக் கூம்பவிழ் முழுநெறி புரள் வரும் அல்குல் (புறம் 116) எனக் குவளை மலரைத் தழை யுடையிற் சேர்த்தலைப் பிறரும் கூறுவர்; இனிக் குவளைத் தூநெறியைக் கூந்தலிற் சேர்த்து எனக் கொள்வாரும் உளர்.

பயிரை உழக்கும் மயிலினத்தைக் கடிவாரான இள மகளிர், மருதமரக் கிளைகளில் ஏறி நின்றவராக விளிக்குரலைச் செய்ய, அதனைக் கேட்ட மயிலினம் வெருவியோடாவாய் மகிழ்ந்து ஆடா நிற்கும் எனவும், அக் காட்சியைக் காண்பார் அதன் தன்மையைக் கண்டு ஆரவாரித்து இன்புறுவர் என்பதும் கொள்க. இவ்வாறு களித்துச் செய்யும் கம்ப யன்றி, வேறு பூசலையறியாத வளநாடு என்பதும் இதல்ை அறியப்படும். -

பொய்கை வாயில் என்றது. பொய்கையின் கண்ணே மிகுதிப்பட்ட நீர் வழிவதற்காக அமைந்திருக்கும் மதகுப் புறத்தை. அம் மதகுகளின் மேலாக மிகுதிப்படும் நீர் வெளிப்பட்டுப் போகும். வெள்ளம் பெருகிற்ருயின், மதகு களையும் திறந்து விடுதற்கேற்றவாறு கதவுகளை அமைத் திருப்பர். அக் கதவுகளின் இடைவெளிகளின் வழியாகக் கசிந்து செல்லும் நீர் ஓடும் கால்களிலே நெய்தற்பூக்கள்