________________
நூலாசிரியர்கள் வரலாறு. 9 ஊர்கள்:- அழுந்தூர், ஆர்க்காடு, இருப்பையூர், உறத்தூர், உறந்தை, ஊணூர், கழார், காழூர், குறும்பூர், குன்றூர், தகடூர், தழும்பனூர், தொண்டி, நீடூர், புகார், பொருந்தில், மணற்குன்று, மரந்தை, முசிறி, வஞ்சி, வாகை, வெண்ணிவாயில். அவை =ஸபை :- உறந்தை நாளவை. விழவு:- கழார்ப்பெருந்துறைவிழவு, கூடல்விழவு. மலைகள் :- குடவரை, கொல்லி, பொதியில். ஆறு :- காவிரி. துறைகள்:- கழார்முன்றுறை = கழார்ப்பெருந்துறை, தொண்டி முன்றுறை. காடுகள்:- உறந்தைப்புறங்காடு, ஓரிகானம். பறந்தலைகள்=போர்க்களங்கள் :-கூடற்பறந்தலை, பாழிப்பறந் தலை, வாகைப்பறந்தலை, வெண்ணிவாயிற்பறந்தலை. கக -ஆம் திருமுறையிலுள்ள சிவபெருமான் திருவந்தாதியியற் றிய பரணதேவ நாயனாரென்பவர் இவரேயென்று விவேகிகள் கூறு கின்றனர். சூ-காக்கைபாடினியார் நச்செள்ளையார்:-ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்னும் அரசன்மீது இந்நூல் சு - ஆம்பத்தை இயற்றி யோராகிய இவர் அணிகலனுக்கென்று கூ-துலாம் பொன்னும் நூறா யிரம் பொற்காசும் அவனாற் பரிசுபெற்றவர் ; பெண்பாலார். நச்செள்ளையாரென்பது இவரது இயற்பெயரென்றும், தொகையில், "திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ றொருகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி ரு பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே" குறுந் என்னும் உக0- ஆம்பாட்டில், காக்கை கரைந்தமையை பாராட்டிக் கூறிய அருமைபற்றிக் காக்கைபாடினியாரென்ற சிறப்புப்பெயரைம் பிற்காலத்தில் ஆன்றோரால் இவர் பெற்றனரென்றும் தெரிகின்றன;