________________
10 நூலாசிரியர்கள் வரலாறு. [பாடினி பாடுபவள்.] செள்ளையென்பது பெண்பாலார்க்கு இயற்பெய ராகப் பண்டைக்காலத்து வழங்கிவந்ததுபோலும்; இந்நூல் கூஆம் பத்தின்பதிகத்தில்மையூர்கிழானுடையமனை வியின்பெயர் அந்துவஞ் செள்ளையென்று வந்திருத்தல்காண்க. மறக்குடிமங்கையின் சிறப்பை விளக்கிப் புறநானூற்றில் இவர்பாடிய உஎஅ ஆம் பாட்டு, பெண் பாலாருடைய பாக்களின் வரிசையிற் சேர்க்கப்பெற்றிருத்தலும் இவர் பெண்பாலாராதலை வலியுறுத்தும். 'கலனணிக' என்று அரசன் பொற்காசு முதலியன கொடுத்தானென்றது ஈண்டு அறியற்பாலது. எட்டுத்தொகையில் இவர் செய்தனவாக, கஉ - செய்யுட்கள் காணப்படுகின்றன. (இந்நூல் க0; : குறுந். க; புறநா.க.) எ.-கபிலர்:- இவர் செல்வக் கடுங்கோ வாழியாதனென்னும் சேரவரசன்மீது இந்நூல் எ ஆம் பத்தைப்பாடி நூறாயிரம் பொற் காசும் அவன் ஒருமலைமீதேறிக் கண்டு கொடுத்தநாடும் பரிசி லாகப் பெற்றவர். இஃது இப்பத்தின் பதிகத்தாலும் அரு-ஆம் பாடலிலுள்ள "கபிலன் பெற்ற வூரினும் பலவே என்பதனாலும் விளங்குகின்றது. இப்பெயருடைய புலவர் சிலருளர். 2.67- இவர் பிறந்தவூர் பாண்டிநாட்டிலுள்ள திருவாதவூர்; இது திரு வாலவாயுடையார் திருவிளையாடற்புராண த்தில் ஆவதாகிய ஞானவுபதேசஞ்செய்த திருவிளையாட லிலுள்ள, 'நீதியார் மதூக நீழ *னெட்டிலை யிருப்பை யென்றோர், காதல்கூர் பனுவல் பாடுங் கபில னார் பிறந்த மூதூர், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி துலங்கக் காட்டும், வேதநா யகனார் வாழும் வியன்றிரு வாத வூரால்" என் னும் ச-ஆம் திருவிருத்தத்தால் வெளியாகின்றது. இவர் அந்தணவருணத்தினர்; புறநானூற்றில், (உoo)யானே, பரிசிலன் மன்னு மந்தணன்", (உ0க) "யானே, தந்தை தோழ னிவரென் மகளி, ரந்தணன் புலவன் கொண்டுவந் தனனே" எனத் தம்மைப்புலப்படுத்தற்காக இவர்கூறிய செய்யுட்களும், (கஉகூ) "புலனழுக் கற்ற வந்த ணாளன்" என மாறோகத்து நப்பசலையார் வரைப் பாராட்டிக்கூறியசெய்யுளும் இதனை வலியுறுத்தும்.
- "நெட்டிலை யிருப்பை வட்ட வொண்ட, வாடா தாயிற் பீடுடைப் பிடி யின், கோடேய்க் கும்மே வாடிலோ பைந்தலைப் பரதர். மனைதொறு முணங் குஞ், செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே"—இச்செய்யுள் தமிழ்நாவலர்சரி தையிற் கண்டது.