________________
எட்டாம் பத்து. ககூரு (எ) கோதைமார்ப, (க) செருவத்து உயிர்போற்றலை; (e) இரவலர் நடுவண்சொடைபோற்தலை;(௩)பெரியோரைப்பேணிச் சிறியோரை அளித்தி; (அ) அனையநின்குணங்கள் அளப்பரியை; நீ அவ்வாறொழுகுதலாற் (ச) பிரிந்த நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் (௫) பிறர் நச்சுதலறியா; அவ் வாறு அறியாமையின், (ககூ) பெரும, அவ்வாறாகியநின்புகழ் (கஅ) நிலைஇ நின்னிடத்துக் கேடிலவாகவென் மாறிக்கூட்டி வினைமுடிவுசெய்க. அ 'அனையவளப்பருங்குரையை'என்றது(ங) 'சிறியோரையளித்தி' என்றதன் பின்னே நிற்கவேண்டு தலின், மாறாயிற்று, இதனாற்சொல்லியது, அவன் பலகுணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்தியவாறாயிற்று. (பி-ம்.) ச. பிறந்த. கூா. அ. அனையையளப். வாரார்நின்னிலத்தெளிந்து. () (20.) வான்மருப்பிற் களிற்றியானை மாமலையிற் கணங்கொண்டவ ரெடுத்தெறிந்த விறன்முாசங் கார்மழையிற் கடிதுமுழங்கச் ரு சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் றொடிசுடர்வரும் வலிமுன்கைப் புண்ணுடையெறுழ்த்தோட் புடையலங் கழற்காற் பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வா ளொடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ க0 யிடுக திறையே புரவெதிர்ந் தோற்கென வம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ வனையை யாகன் மாறே பகைவர் கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக் கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி கரு புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் றெம்முனை யானே. துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு வண்ணம் - ஒழுகுவண்ணம், தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும். பெயர் - (எ) புண்ணுடையெறுழ்த்தோள்.