கொள்க. பதிற்றுப் பத்து. இச்சிறப்பானே இதற்கு 'அடுநெய்யாவுதி' என்று பெயராயிற்று. எ ஆவுதியென்ற இரண்டனையும் அவற்றானாய புகைமேற் கச. நாற்றமொடென்பதனை நாற்றத்தர்னெனக்கொள்க. கரு, கடவுளும் விழைதகவென்றது கடவுளரும் இவ்வாறு நாம் அறஞ்செய்யப்பெறின் அழகிதென்று அதுவிரும்பவென்றவாறு. பேணி யென்றது, முன்சொன்ன வேள்வியால் தேவர்களையும் பின்பு. அதனோடு ஒப்பித்துச்சொன்ன ஆள்வினைவேள்வியால் விருந்தாய்வருமக்களையும் பேணியென் றவாறு அதனைத்திரித்துப் பேணப் (ககூ) பழுனியவென முடிக்க. பழுனியவென்பது பெயரெச்ச வினைத்திரிசொல். கக. ஆர்வளம்பழுனிய சிறப்பென்றது கொடுக்கக் கொடுக்கக் குறைபடாத நிறைந்த செல்வத்திலேநின்று பழுத்த சிறப்பென்றவாறு. கள்ளிற்போர் வல்யானையென்னும் ஒற்று மெலிந்தது, கஎ (கஅ) ஆர்ப்புச்சிறந்து (ககூ) கலந்தரூஉம் மார்பவெனக் கூட்டுக.• மண்படுமார்பவென்றது பகைவர்மண்ணெல்லாம் படுகின்ற ககூ. மார்பவென்றவாறு, (உக) பல்லாபரப்பிக் (உஉ) கதிர்மணிபெறுஉஞ் (உ௩) செருப் பென முடிக்க.
௨௩. செருப்பென்பது ஒருமலை. மிதியலென்பது அடை; மிதி யென்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப் படுத்தானாகவுரைக்க. (உசு) குவியற்கண்ணியென்னுந் தொடைநோக்கி மிதியற்செருப்பெனவலிந்தது. மிதியற்செருப்பென்பற்குப் பிறவாறு சொல்லுவாருமுளர், உசு. குவியற்கண்ணியென்றதற்கு வெட்சிமுதல், வாகையீறாய் போர்க்கண்ணியெல்லாம் குவிதலையுடைய கண்ணியென்க. கூ. பரிவேட்பு அஞ்சா அயிரையென்று வெளிப்படை கூறுகின்றானாகலின், அதற்கேற்ப, நீரறன்மருங்கு வழிப்படாவென்று பெய ரெச்சமறையே பாடமாகல் வேண்டும். இனிப்படாதென்று வினையெச்ச மறையாகிய பாடத்திற்கு நீரற்றவிடத்தில் தான் படாதபடியாலே கொக் கின் பரிவேட்புக்கு அஞ்சா அயிரையெனவுரைக்க, அயிரையென்பது ஒரு மலை. (உடு) நெடுங்கோட்டு (உக) அயிரையென முடிக்க. ஙக. மாந்தர்க்கு நோயிலூழியாகவென மாறிக்கூட்டுக; கிடந்த வாறும் பொருள்படும்.