உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பதிற்றுப்பத்து மூலமும் பழையவுரையும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் பத்து. தூங்குபு என்பதனைத் தூங்கவெனத் திரித்துக் காலவழு வமைதியெனக்கொள்க. தகைத்தல் - கட்டுதல். உ௩. வில்விசை மாட்டிய விழுச்சீர் ஐயவியென்றது விசையை யுடைய வில்லானும் துளையுருவ எய்யமுடியாது மிக்க கனத்தையுடைய ஐயவித்துலாமென் தவாறு. ௩எ. கருங்கண் - கொடியகண். வழங்குதல் - ஆடுதல். (கக) உரவோரும்பல், (ககூ) தோன்றல், (உஎ) குட்டுவ, நீ (ஙக) சீறினையாதலின், நாடுகெழுதண்பணை (ஙஅ) அளியதாம் பெரும் பாழாகுமெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. இதனாற்சொல்லியது, அவன்வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று. சீறினையர் தலின், நாடுகெழு தண்பணை பாழாகுமென எடுத்துச்செல் வினை மேலிட்டுக்கூறினமையால், வஞ்சித்துறைப் பாடாணாயிற்று. (கஎ) 'உளைப்பொலிந்தமா' என்பது முதலாய நாலடியும் (உச) 'கடி மிளை' என்பதுமுதலாய இரண்டடியும் வஞ்சியடியால்வந்தமையால், 'வஞ்சித்தூக்குமாயிற்று. று 2.0. கல்' என அடியிடையும், 'ஒடு' என அடியினிறு தியும் வந்தன கூன், (பி-ம்.) க௩. சிரறுசெல. ஞாயிறுகொண்ட, (2) (உங) அலந்தலை யுன்னத் தங்கவடு பொருந்திச் சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து நிலம்பை தற்ற புலங்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பைய ராங்கண் ரு மன்றம் போந்து மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனையிழை யொலிப்பப் பெரிதுவந்து நெஞ்சுமலி யுவகைய ருண்டுமலிந் தாடச் சிறுமகி ழானும் பெருங்கலம் வீசும் 40 போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ நின்னயந்து வருவேங் கண்டனம் புன்மிக்கு வழங்குந ரற்றென மருங்குகெடத் தூர்ந்து பெருங்கவி னழிந்த வாற்ற வேறுபுணர்ந் தண்ணன் மரையா வமர்ந்தினி துறையும் கரு விண்ணுயர் வைப்பின காடா யினநின் மைந்துமலி பெரும்புக ழறியார் மலைந்த