பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சந்தோஷமும் இப்போது அவரை அந்தரத்தில் நிறுத்தி விட்டு ஓடிவிட்டன. அவர் தவித்தார்.

கணங்கள் ஊர்ந்தன.

செந்தில்நாயகம் மாடிப்படிகளை எதிர்பார்த்து நின்றார்.

அதோ யாமினி!...

விழிமறுகி, ஜாடையாகப் பார்த்தார் அவர். விழிகள் கலங்கின!

அவள் வந்தாள். கைகூப்பிக்கொண்டே வந்து நின்றாள். சோகமே வடிவாகி வந்து நின்றாள்.அவளது அந்த 'மஞ்சள் தாலி' அவளுடைய மார்பகத்தில் வெளிப்படையாகத் தவழ்ந்து கிடந்தது!அவள் அழகு அப்படியே இருந்தது. நெற்றிப் பொட்டு துல்லிதமாய் விளங்கியது. சுருண்ட நரை முடிகள் ஒன்றிரண்டு கன்னங்களே வருடின!...

ஆம்;அவள் யாமினி !

அவள்தான் யாமினி !