பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
145
இனி, ஞானப்பிரகாச முனிவர், தமக்கபிமதமான சிவசமய வாதந் தமிழின்கட் கூறல் வேண்டினாராயின் வடமொழிக்கட் பிரமாண தீபிகை, சித்தாந்த சிகாமணி முதலிய கிரந்தங்களால், அது கூறிவைத்தாற் போலத், தமிழின்கண் புது நூல்களால் கூறிவைத்துப் போதலே, அவர் தமக்கு முறையாம்; இனி அவ்வாறு செய்யாது, நால்வகைச் சமயங்களுக்கும் மேன்முறையாய்ப் பிரசித்தியுற்று விளங்கும் சித்தாந்த சைவ நூலாகிய சிவஞான சித்தியை, அலைத்திடர்ப்படுத்து அங்ஙனந் தம் மதப் பிரசாரஞ் செய்தது அவர்க்குச் சால்பாகாமையறிக,
—திராவிடப் பிரகாசிகை இதழ்.

இச் சபாபதி நாவலர் சித்தாந்த மரபு கண்டன கண்டனம், வைரக்குப்பாயம், சிவசமய வாத உரை மறுப்பு முதலிய சமயக் கண்டன நூல்களைச் சிதம்பரத்திலிருந்து வெளியிட்டுள்ளார்.

தர்க்கம்

சென்ற நூற்றாண்டில் சைவத் தூண்களாக நின்ற அறிஞர் பலர். அவருள் பலராலும் சிறந்தவராகப் போற்றப்பெற்றவர் 'வைதீக சைவ சித்தாந்த சண்டமாருதம்’ என்று சிறப்புப் பெயர் பெற்ற சூளை சோமசுந்தர நாயகர் அவர்கள். அவரும் அவர் மாணவர் எனத் தம்மைப் பெருமையோடு கூறிக்கொள்பவருள் சிலரும் தமிழ் உரை நடையில் சைவ சமயம் பற்றி நல்ல நூல்கள் எழுதியுள்ளனர். சைவ சமயத்தை மறுப்பாருக்குப் பதிலாக தர்க்க முறையிலும் பல உரைகள் அவர்களால் எழுதப் பெற்றன. பிற மதங்களைக் குறை கூறும் வகையிலும் மற்றும் பல நூல்களும் வெளிவந்துள்ளன. சென்ற நூற்றாண்டில் சமயக் கண்டனங்களும் மறுப்பு நூல்கள் பலவும் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒருவரை ஒருவர் வன்மை