பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
146

யாகவும் தாக்குகின்றனர். வைரக்குப்பாயம், குதர்க்கவிபஞ்சனி, கண்டனம், கண்டன கண்டனம் என்ற வகையில் பல உள்ளன. முதலாவதாகத் தர்க்கம் அல்லது அளவையைப் பற்றிய குறிப்பினைக் காண்போம்.

சித்தியார்

அளவை

தருக்கம் (Logic)

அளவை என்பது அளந்தறியப்படுவது: அஃது எவ்வாறாம்? எனின், உலகத்து பதார்த்தங்களை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகை அளவினால் அளந்தறியுமாறு போல, பதி முதலிய பொருள்களைப் பக்குவான் மாக்கட்கு அளந்து அறிவிக்கையின் பொருட்டு அளவைப் பிரமாணங்களை முதற்கண் கூறியது என அறிக.

ஒரு விளக்கம்

இதனால் சொல்லியது தோற்பாவையையும், மரப் பாவையையும், தேரினையையும் இவையிற்றை இயக்குகின்றவன் வேருய் நின்று இயக்குகின்ற முறைமை போலவும், பல கோலங்களைச் சமைத்து அந்தந்தக் கோலம் தானாய் நின்று ஆடுகிற கூத்தாடி முறைமை போலவும், பந்திக்கப்பட்ட காயத்தை ஆன்மா நின்று ஆட்டுகிற தனமையும் என்னும் முறைமையும் அறிவித்தது.
சிவஞான் சித்தி-இலக்-சூத்-4
அதி-2, பக்-685.

சோமசுந்தர நாயகருடைய மாணவர் பலர். அவருள் ஒருவராகச் சிறந்தவர் மறைமலை அடிகளார். அவர் அக்காலத்தில் ‘நாகப்பட்டினம் வேதாசலம்பிள்ளை’ என வழங்கப்பெற்றர். அவர் “துகளறு போதம்“ என்னும் சித்தாந்த நூலுக்கு உரை செய்துள்ளனர். அதன் முகவுரையையும் (1898) அவரைப் போன்றே மற்றாெரு மாணவராகிய