பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
155

கின்றன. இந்த அளவோடு சைவ சமய உரைநடை நூல்களையும் தர்க்க வாதங்களையும் நிறுத்தி மேலே செல்லலாம்.

வைணவம்

வைணவ சமயத்திலும் சென்ற நூற்றாண்டில் பல உரைநடை நூல்கள் எழுதப் பெற்றன. பெருங் காவியங்களுக்கும் 'வசனங்கள்' எழுதப் பெற்றமையை முன்னரே கண்டோம். பல காவியங்களுக்கு உரைகளும் எழுதப் பெற்றன. சில வைணவ விரதங்களுக்கு விளக்கங்களும் தரப்பெற்றன.

ஆசிரியர்கள், வைணவ நூல்களில் அதிக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதைக் காண முடிகின்றது. ஆசார்ய ஹிருதயம்: (ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள்

நாயனார்-1870)

ஊராரென்றும், நாட்டாரென்றும், உலகத்தாரென்றும் சொல்லப்படுகின்றவர்கள் கேவலரும் இகபரலோ கைஸ்வர்ய காமருமான ஸ்வதந்த்ரரும் ஸங்கோச ரூபமான கைவல்ய மோக்ஷத்திற் கும்ப்ரக்ருதி ஸ்ம்பந்த நிவர்த்தியானால் தங்கு மூர்ஸ் மானமே. கீதையில் ஸித்த தர்மத்தினுடைய விதி இப்பிரபந்தத்தில் விதியும் அநுஷ்டாநமும், பாட்டுக்களுக்கும் கிரியைகளும் தஸ்கத்துக்குத் தாத்பர்யமும் போல நூறு பாட்டுக்களுக்கும் பரோப தேஸ் பரமான திருவாய்மொழி ப்ரதாநம்.

வார்த்தாமாலை: (நாத முனிகள் 1882)

ஒருவனுக்கு அறியவேண்டுவது, ஸ்வரூப புருஷார்த்தோபாயங்கள். சித்துக்கு மூன்று ஸ்வபாவம் ஈஸ்வரனுக்கு மூன்று ஸ்வபாவம். அசித்துக்கு மூன்று ஸ்வபாவம். உற்பத்தியையும், உடைமையையும், உடைமைக்கு உண்டான ஊற்றத்தையும் உடைமைக்கு உடைமையில்