பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
67



இவ்வாறு அவரே இத்துறையில் தாம் மேற்கொண்ட முயற்சியையும் அதற்கு உண்டான பல்வேறு இடையூறுகளையும் விளக்கிக் காட்டுகின்றர். அவர்தம் வெளியீட்டுத் தொகுப்பில் தமிழில் 192[1] கையேட்டுப்படிகள் அப்போது தொகுக்கப் பெற்றன. புராணம், கட்டுக்கதை, உள்நாட்டு வரலாறு, வாழ்க்கை வரலாறு, கதை, நாடகம், தத்துவம், வான நூல், மருத்துவம், கலை முதலிய பல்வேறு பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி ஒவ்வோர் ஊரிலும் வழங்கும் சிறுகதைகள் பழக்க வழக்கங்கள் பற்றியும் (local tracts) தமிழில் 255 தொகுக்கப் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தம் காலத்தில் தமிழ் நாட்டு மூலை முடுக்குகளில் வழங்கப்பெற்றுள்ள பல்வேறு வகை வாழ்வு முறைகள் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் தாமே நேரில் சென்று கண்டு, கேட்டு, எழுதித் தரச்செய்து வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒரு சில நாம் காண இருக்கிறோம்.

  1. தமிழில் 192 கையேட்டுப் படிகள்
    புராண, கட்டுக்கதைகள் 44
    உள்நாட்டு (அ) ஊர் வரலாறு 39
    கதை, பாட்டு, நாடகம் (சமய அற வாழ்வுபற்றி) 72
    தத்துவம் 10
    வான சாத்திரம், சோதிடம் 14
    மருந்து 10
    கலை 3

    192

    தமிழில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் அவர் தொகுத்துள்ளார். அவை:

    தெலுங்கு 156
    பழைய கன்னடம் 39
    புதுக் கன்னடம் 3
    மலையாளம் 6
    மராட்டி 12
    ஒரியா 23
    இந்தி 12