பக்கம்:பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் உரைநடை வளர்ச்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80


இவ்வாறு தொடங்கிய வரலாறு, பின் பல்வேறு விளக்கங்கள் காட்டி அடியிற் கண்டபடி முடிகின்றது.

நின்ற சர்க்கார் இரண்டு பங்குக்குச் சர்க்கார் மானியம் போட்டுக் கொண்டார்கள். அதுமுதல் எதத்கக்ஷணம் வரையில் ௸ பூமி அனுபவித்து வருகிறோம். இது நடந்த கைபீயத்து. இக் கைபீது எழுதினது ௸யூர் ஜனம் பேர். குப்பன் எழுத்து. இராமையன் கையெழுத்து. இரங்கையின் ருசுவு, திருமலைராயன் ருசுவு. நாராயணய்யன் ருசுவு (Mec. collections, D. 2877)

இவ்வாறு இவ்வரலாற்றுக் குறிப்பு முடிகின்றது. இதில் காணும் ஆண்டுக் கணக்குச் சரியாக இல்லை. இதைக் கைபியத்து அல்லது கைபீது என்று குறித்துள்ளனர். இச்சொற்களுக்கு விவரக் குறிப்பு என்றும் statement, report, detailed account, particulars, என்றும் பொருள் உள்ளன. கைபீயத்து நாமா என்றால் பிராமணப் பாத்திரம் அல்லது ‘Affidavit’ என்று பொருள்.[1] 1839 இல் வெளியான நூலில் 'news, particulars' என்ற பொருள்கள் உள்ளன[2]. எனவே இச்சொல் இன்று நாட்டில் அதிகமாக வழக்கத்தில் இல்லை என்றாலும் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் கிராம மக்களிடத்தில் மிகச் சாதாரணமாக வழங்கிய ஒன்று எனத் தெரிகின்றது. இதில் எழுதினவர், சாட்சி தந்தவர் ஆகியோர் பெயர்களும் இறுதியில் இடம்பெற்றுள்ளன. ‘ருசுவு’ என்பது சாட்சியாகும். ‘மிட்டாபயிசி மவுசே’ என்பது அக்கிராமம் தானமாகக் கொடுத்த வகையை விளக்கும் தொடர்போலும், இத்தகைய ‘கைபீது’கள் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டில் அதிகமாக வழங்கி வந்தமையின் இச் சாசன முறையால் தமிழ்


  1. Tamil lexicon-vol. II, P. IIII.
  2. A compilation of papers in the Tamil language by Andrew Colerson, 1837, P. 202.