பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லறிவு பெற்ற பொடிக்கள்ளி! பொடிப்போட்டு உன்னைக் கெடுப்பதுடன் ஓய்ந்தாயா? உட்காரும் திண்ணை தனக்கெடுத்தாய். தெருக்கதவை நீகெடுத்தாய் ஆடை கெடுத்தாய் அறைச்சுவரெல் லாம்கெடுத்தாய் : துணைக் கெடுத்துத் தொலைத்தாய் உன்னெதிரில் காணும் பொருள்கள் அத்தனையும நீகெடுத்தாய் ! ஊரைக் கெடுக்கும் உன்செயலால், இலக்குவனுன் சீரைக் கெடுத்தான் ; தெரியாதா உன்சேதி ? கண்ணக் கொடுத்தவர்கள் காயஞர் ஆனதுண்டு: உன்னைக் கொடுத்தவர்கள் உருப்பட்ட சேதியுண்டா? மூக்குப் புராணம் இருக்கட்டும் மூடிவைத்த யாக்கைக் கைகாரியின் அழகென்ன வாழ்கிறதாம் ? என்னைக் காண்பதற்கு எவரேனும் கூசுவரோ ? சாரைக்கண் என்றென்னைச் சற்றே இகழ்ந்தாலும் ஓரக்கண் பார்வையில்தான் உலகமே தழைக்கிறது. வானத்தில் தோன்றும் வளர்மதிபோல், ஆடையின்றி கானெழுந்து வந்தாலும் யாரென்னைக் கூசிடுவார்? மேனியே : பிறர்பார்க்க விரும்பாத காரணத்தால் காணிப் புதைந்தாய் கான்கைந்து ஆடைக்குள் ! கள்ளத் தனம்பெற்ற காரணத்தால் யோடைக் குள்ளே மறைந்துவிட்டாய் ; உன்புத்தி தெரியாதா ? கானகத்தில் ராமன் கண்ணிர் வடித்ததுன்றன் கூனல் விளைந்த கொடுமையன்றி வேறுண்டா? பொய்யாக மாறிப் புதைகின்ற உன்னைப்போய் மெய்யென் றெவன்சொன்னன் மெய்ப்பொருளை உணராதான். 106 வனித்துளிகள்