பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணவாய்த் தென்றல் மாலைப் பொழுதில் புலால்வாய்க் கொக்குகள் புணரக் கண்டு சைவத் தாமரைப் பெண்கள், தம்மிதழ்க் கைகளால் கண்களை மூடிக் கொள்வதும்; தமதுள் ளத்தில் காணம் மிகுவதால் குமரி அரும்புகள் குனிந்து கொள்வதும் இங்கு மிகழும் இனிய காட்சிகள். அலைகடல் விழுங்கிய அழகிய புகாரைக் கலைகளை வளர்த்த காவிய நகரைக் கனவுகள் ஆக்கிக் கண்டோம் அந்நகர் ஆரூர்க் கலைஞரின் அரிய முயற்சியால் கண்முன் எழுந்தது ; காணலா ரீரே ! வானியம்பாடி இசுலாமியக் கல்லூரி முத்தமிழ் விழா '70 112 பனித்துளிகள்