பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவலன் காதலியர் முத்தமிடச் சிவந்த கன்னம் கன்னியர்கள் புரண்டதளுல் சிவந்த மார்பம் ஆதரவாய்க் குமணன் போல் ஏழை யர்க்கே அள்ளியள்ளிக் கொடுத்ததனுல் சிவந்த கைகள் மாதவியாள் கூந்தலையும் கோடு யர்ந்த மகரயாழ் நரம்பினையும் தடவித் தொட்டுக் கோதியதால் சிவந்தவிரல், இவைகள் யாவும் கொண்டதளுல் கோவலனேர் செவ்வேள் ஆளுன். தொடுந்தோறும் புதியபொருள் தொடரு கின்ற தூயதமிழ்க் குறளைப்போல் வளரும் செல்வம் : விடுங்தோறும் அலைகடல்மேல் விரைந்து சென்று வெளிநாட்டை விலைபேசிக் கொணரும் கப்பல், நெடுந்தேர்கள், பல்லக்கு கிலத்தில் தாவும் நிலாக்கூட்டம் போல்வெள்ளைக் குதிரைக் கூட்டம், அடர்ந்தபெரு மாளிகைகள் பெற்ற தாலே அரசகுடிக் கடுத்தகுடி யாக வாழ்ந்தான். Faಣಿ 113 uனி.8