பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்றன் அரங்கேற்றம் ஊரறிய நடக்கையிலே என்றன் கோவலரும் நானுமங்கு வந்திருந்தோம் ; ஆடலா பார்த்தேன் ! அருகில் இருந்தவென்றன் கோவலர் உள்ளக் குரங்காட்டம் பார்த்திருக்தேன். கண்களால் உன்னைக் கற்பழித்தார் அன்றைக்கே எதிர்காலம் என்றனுக்குப் புதிர்காலம் ஆயிற்று ! பண்கள் பிசைகின்ற பாட்டுவாய் மாதவி ! உன்னைக் குறைகூற ஒருப்படேன் , தமிழ்நாட்டுப் பெண்டிர் குறைகளுக்கு வித்திட்டோர் ஆடவரே ! போதுமென்ற உள்ளமுடன் இக்காட்டில் ஆடவர்கள் மாதொருத்தி யோடு வாழும் வழக்கமில்லை. ஆகத்தில் ஒருத்தியும் அருகினிலே ஆசையுடன் போகத்திற் கொருத்தியும் கொள்ளாத கடவுளுண்டா ? 124 பனித்துளிகள்