பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளமான இலக்கணமும் சொல்ல மைப்பும் வாய்க்காத மொழியெல்லாம் சிலநூற் றண்டில் கிழமாகிக் கங்தையைப்போல் கிழிந்து போகும். கேட்பார்க்குப் புரியாத புதிராய்ப் போகும். பழகுதமிழ்ச் சொல்லருமை, படிப்ப வர்க்குப் பார்த்தவுடன் புரிந்துவிடும் நமது முன்னேர் தழுவுவதைத் தழிஞ்சியென்பர் காத லர்கள் தனியிடத்தில் குறுகுவதைக் குறிஞ்சி யென்பர். குறிஞ்சியிலே புணர்ச்சியினைப் பொருளாய் வைத்த கொள்கையினை நாமுணர வேண்டும் அங்கே மரச்செறிவில் மாங்குயில்கள் புணரும் பூத்த மதுமலரில் வண்டினங்கள் புணரும் நல்ல விரைக்கொடிகள் மரங்தோறும் புணர்ந்து, காதல் விளையாட்டை நமக்குணர்த்தும் , பொங்கிப் பாயும் அருவிகளின் மத்தளப்பே ரிசையில். ஆங்கே அனைத்துயிரும் விழாவெடுத்து மணந்து கொள்ளும் மதுக்குடங்கள் உடைப்பதுபோல் கொம்பு தோறும் மலருடைக்கும் வேங்கை மரத் தடியில் கிற்கும் செதுக்காத சிலைப்பெண்ணை ஒருவன் கண்டால் சீயென்ரு உதறிவிட்டுச் செல்வான் ? அந்தப் பதுக்காத தங்கத்தைப் பார்ப்பான் , அங்கே பைங்கிளிகள் கொஞ்சுவதைப் பார்ப்பான் ; பொங்கும் புதுக்காதல் தோன்றுதற்குக் கார ணங்கள் போதாவா ? குறிஞ்சிநில அமைப்பே காதல் ! குறிஞ்சி 1.37