பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுகின்ற கின்னரக்கால் அடிகள், காளும் படுகின்ற கிலத்தின்மேல் நடக்கும் போது கோடியின்பம் அவன்பெறுவான் , அவளு டம்பைக் குளிப்பாட்டி வருகின்ற தென்றல், தன்னை நாடிவரும் போதெல்லாம் சிலிர்ப்பான் , அந்த நளினமயில் மாடியன்ருே கண்ணன் கண்கள் தேடுகின்ற மேலுலகம் அந்தத் தேவி திருவடியின் கீழலன்ருே திளைக்கும் முக்தி. எரிகின்ற தீபத்தின் கொழுந்தைக் கண்ணுல் இருவருமே தூண்டிவிட்டார் ; காதற் பட்டம் பெருமூச்சால் மேலெழும்ப, வலைச்சி லங்திப் பின்னலெண்ணம் பின்னியதில் தாமே வீழ்ந்தார். வரும்போகும் உயிர்மூச்சைப் போலக் கோதை வாசலுக்கும் உள்ளறைக்கும் நடந்த வண்ணம் பெரும்பேதை நாள்தோறும் கழிப்பாள் ; கண்ணன் பேச்செல்லாம் கடைக்கண்ணில் பேசித் தீர்ப்பான். வருமழைக்கு முன்னடைந்து பறக்கும் மேக வட்டாரக் கூந்தலினைக் குளித்து விட்டுச் சிறுபவளக் காம்புவிரல் காட்டி யத்தால் சிக்கறுத்துக் கொண்டிருப்பாள் ; பனியில் மூழ்கி விரியுமெழிற் புதுச்கோல மலர்க்கன் னத்தில் விளையாடி விளையாடி எழுந்து கீழே சரிகின்ற பார்வையினை அனுப்பி வைப்பாள் ; சட்டென்று வியர்வையிலே அவன் குளிப்பான். கண்ணிர்த்தவம்